Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
காஷ்மீர் பஹல்கம் தாக்குதலில் கண் முன்னே தந்தையை இழந்த குழந்தை என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”இதற்கான தண்டனை கொடுரமாக இருக்கும். காஷ்மீர் சுற்றுலா சென்ற சிறுவனின் தந்தையை குழந்தை கண் முன்னால் சுட்டு கொன்று இருக்கானுங்க… அந்த குழந்தை சொல்கிறது உன் தந்தை எந்த மதம் என்று கேட்டார்கள்.. ஹிந்து என்றதும் சுட்டு கொன்றார்களாம்” என்று இந்த வீடியோ பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சட்டமியற்றுவதில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்றாரா ஈபிஎஸ்?
காஷ்மீர் பஹல்கம் தாக்குதலில் கண் முன்னே தந்தையை இழந்த குழந்தை என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஜூலை 01, 2020 அன்று “Sopore Terror Attack: Security Forces Rescue 3-Year-Old From Bullets In Jammu And Kashmir” என்கிற தலைப்பில் India Today வெளியிட்டிருந்த வீடியோ செய்தி நமக்குக் கிடைத்தது.
கடந்த ஜூலை 2020ல் ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தனது தாத்தாவிடம் அமர்ந்து அழுது கொண்டிருந்த 3 வயது குழந்தையை ராணுவ வீரர் மீட்டு அழைத்துச் சென்றார் என்று அதில் செய்தி இடம்பெற்றிருந்தது.
மேலும், ஜூலை 01, 2020 அன்று ANI வெளியிட்டிருந்த மறைப்பு செய்யப்பட்டிருந்த வீடியோவில் வாகனத்தில் அமர்ந்து குழந்தை ஒன்று அழுதுகொண்டிருக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. சோப்பூர் பயங்கரவாத தாக்குதலில் மீட்கப்பட்ட குழந்தை என்கிற வாசகங்களும் அதில் இடம்பெற்றிருந்தது.
இந்த தாக்குதல் குறித்து விரிவாக The Hindu வெளியிட்டிருந்த செய்தியில் சோப்பூர் தாக்குதலில் உயிரிழந்த அந்த நபர் பெயர் பஷீர் அஹமது கான் எனவும், அவர் தாக்குதலில் குண்டுகளால் தாக்கப்பட்டு உயிரிழக்கும்போது வாகனம் ஒன்றில் அவரது அருகில் 3 வயதான அவரது பேரன் இருந்ததாகவும் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த மேலும் செய்திகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணுங்கள். கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய இந்த வீடியோவே தற்போது பஹல்கம் தாக்குதலுடன் இணைத்து பரப்பப்படுகிறது.
Also Read: மேற்கு வங்கத்தை நோக்கி படையெடுக்கும் காவி போராளிகள் என்று பரவும் வீடியோ உண்மையா?
காஷ்மீர் பஹல்கம் தாக்குதலில் கண் முன்னே தந்தையை இழந்த குழந்தை என்று பரவும் வீடியோ கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலுடன் தொடர்புடையது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Vasudha Beri
June 24, 2024
Pankaj Menon
May 31, 2025
Pankaj Menon
May 31, 2025