Fact Check
எஸ்.வி.சேகர் திமுகவில் இணைந்ததாக வதந்தி!
நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர், திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்துவிட்டதாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் செய்தி ஒன்று பரவியது.

Fact check/Verification:
பிரபல நடிகர் எஸ்.வி.சேகர் 2006ம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால், 2009ம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் காங்கிரஸ் கட்சி, தற்போது பாஜக என்று அவர் அரசியல் பயணம் தொடர்ந்து வருகிறது. ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற எஸ்.வி.சேகர், சர்ச்சைக்குரிய கருத்துக்களால் அடிக்கடி வைரலாகி வருபவர்.
இந்நிலையில், பாஜகவிலிருந்து நடிகர் எஸ்.வி.சேகர் திமுகவில் இணைந்துவிட்டதாகவும், அதற்காகவே திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்தாகவும் புகைப்படம் ஒன்று வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
https://www.facebook.com/photo.php?fbid=3403731039723239&set=a.342961799133527&type=3

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்ற இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய்ந்தோம்.
உண்மையும் பின்னணியும்:
சமூக வலைத்தளங்களில் பரவும் இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய அது குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகிய புகைப்படச் செய்தி, ஒரு பிரபல வார இதழ் வெளியிட்டது போன்றே பரவி வந்தது. எனவே, முதலில் அவ்வார இதழின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கங்களை ஆராய்ந்து பார்த்தோம்.
ஆனால், குறிப்பிட்ட அந்த புகைப்படம் குறித்த வார இதழ் செய்தியை நம்மால் கண்டறிய முடியவில்லை. ஒருவேளை, அவ்வார இதழ் குறிப்பிட்ட அச்செய்தியை நீக்கியிருக்கலாம்; அல்லது அந்த செய்திப் புகைப்படமே பொய்யாக இருக்கலாம் என்று நாம் கண்டறிந்தோம்.
எனவே, மேலும் அந்தப் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆராய்ந்தோம். அப்போது, அப்புகைப்படம் குறித்து விகடன் வெளியிட்டிருந்த அவரது பேட்டிக் கட்டுரையை நம்மால் கண்டறிய முடிந்தது.
மேலும், அப்புகைப்படம் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வென்ற குழுவுடன் இணைந்து அவர் சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலினையும் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்தபோது எடுக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது.
அதுமட்டுமின்றி, இச்செய்தி குறித்த மறுப்பைத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் எஸ்.வி.சேகர் அவர்களே பதிவிட்டுள்ளார் என்பதையும் நாம் ஆய்வின் மூலம் அறிந்துகொண்டோம்.
Conclusion:
எனவே, நடிகர் எஸ்.வி.சேகர் பாஜகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்துவிட்டார் என்கிற செய்தி முற்றிலும் பொய்யான செய்தியாகும். இதனை நியூஸ் செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளோம். எனவே, வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ் செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
Result: False
Our Sources:
S.V.Sekar (Twitter): https://twitter.com/SVESHEKHER/status/1332227461505900545?s=20
Vikatan: https://www.vikatan.com/news/politics/s-ve-shekher-speaks-about-udhayanidhi-stalin-meeting
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)