Fact Check
உங்கள் பிச்சை ஓட்டு தேவையில்லை என்றாரா தேனி அதிமுக வேட்பாளர்?
Claim: தேனி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பெண்களை தகாத வார்த்தையில் திட்டியடி உங்கள் பிச்சை ஓட்டு தேவையில்லை என்றார்.
Fact: வைரலாகும் இத்தகவல் தவறானது என்று அதிமுக தரப்பும் பாலிமர் நியூஸ் தரப்பும் தெளிவு செய்துள்ளது.
“தேனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை பெண்கள் சூழ்ந்து கேள்வி கேட்டதால் கோபமடைந்த அவர், பெண்களை தகாத வார்த்தையில் திட்டியபடி “உங்க பிச்ச ஓட்டு எனக்கு தேவை இல்ல” என சொன்னதால் பெண்கள் அதிர்ச்சி” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

