Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
கர்நாடக அரசு லூலூ ஒப்பந்தத்தை கைவிடாவிட்டால் கர்நாடக சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

ஐக்கிய அரபு நாடுகளைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகின்ற லூலூ குரூப், தமிழகத்துடனான 3500 கோடி ரூபாய் முதலீடு ஒப்பந்தத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் புதிய முதலீட்டிற்கான ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் லூலூ குழுமம் கால்பதிக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகாவிலும் கர்நாடக அரசு லூலூ குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, “கர்நாடக சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம். கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு லூலூ குழுமத்துடன் ரூ.2000 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் அந்த ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் என்றும் இல்லையெனில் கர்நாடக சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம் எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்” என்பதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கடைசி நிமிடங்கள் என்று பரவும் வீடியோ உண்மையானதா?
கர்நாடக அரசு லூலூ ஒப்பந்தத்தை கைவிடாவிட்டால் கர்நாடக சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம் என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட நியூஸ்கார்டு ஜூனியர் விகடனுடையது போன்று வைரலாகி வருகின்ற நிலையில் அதில் பல்வேறு எழுத்துப்பிழைகள் இருந்ததால் ஜூனியர் விகடனின் டிஜிட்டல் பிரிவு ஆசிரியரான பிரிட்டோவிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.அப்போது அவர், குறிப்பிட்ட நியூஸ்கார்டு போலியானது என்று உறுதி செய்தார்.


தொடர்ந்து, பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையின் முதன்மை செயலர் பிரபாகரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவரும் குறிப்பிட்ட செய்தி போலியானது என்று உறுதி செய்தார்.
கர்நாடக அரசு லூலூ ஒப்பந்தத்தை கைவிடாவிட்டால் கர்நாடக சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம் என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Junior Vikatan
I.Britto, Junior Vikatan Digital Team
Prabhakar, Annamalai PA
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 20, 2024
Vijayalakshmi Balasubramaniyan
June 14, 2024
Ramkumar Kaliamurthy
June 13, 2024