Tuesday, September 1, 2026

Fact Check

Fact Check: நிர்மல்குமார் பொய் செய்திகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றாரா அண்ணாமலை?

banner_image

Claim: நிர்மல்குமார் பொய் செய்திகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறினார்.

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.

பாஜகவின் சமூக ஊடக அணியின் மாநிலத் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல்குமார் அண்மையில் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

இந்நிலையில்,“வடநாட்டவர்கள் ஹோலி கொண்டாட ஊர் திரும்புவதுபோலத்தான் நிர்மல்குமார் அதிமுகவில் இணைந்ததும். எங்கிருந்தாலும் வாழ்க. ஃபேக் நியூஸ் மட்டும் குறைத்துக் கொள்ளவும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

நிர்மல்குமார் பொய் செய்திகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screengrab from Twitter@Tamilan2Indian
நிர்மல்குமார் பொய் செய்திகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screengrab from Twitter@its_me_King1
நிர்மல்குமார் பொய் செய்திகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screengrab from Twitter@Saimanrajs

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: அமெரிக்க 100 டாலர் கரன்சியில் அம்பேத்கர் புகைப்படம் என்று பரவும் போலியான தகவல்!

Factcheck / Verification

நிர்மல்குமார் பொய் செய்திகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இதன் உண்மைத்தன்மை குறித்து அறிய அந்த நியூஸ்கார்டை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.

இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிந்தது.  ‘வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணம், அக்கட்சியில் தொண்டர்கள் இல்லை, தலைவர்கள் இல்லை, வழிநடத்தக்கூடிய பொறுப்பில் யாரும் இல்லை, அதன் வெளிப்பாடு தான் இந்த படுதோல்வி’ என்று அண்ணாமலை பேசியதாக பாஜகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் நியூஸ்கார்ட் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே வைரலாகும் நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்

தொடர்ந்து தேடியதில், ‘அன்பு சகோதரர் திரு @CTR_Nirmalkumar அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் எங்கு சென்றாலும் உங்களது பணி சிறக்கட்டும்.’ என்று அண்ணாமலை நிர்மல்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து டிவீட் செய்திருந்ததை காண முடிந்தது.

Also Read: Fact Check: மாணவர்களுக்கு 2023ஆம் ஆண்டிற்கான இலவச லேப்டாப் திட்டம் என்று பரவும் தகவல் உண்மையா?

Conclusion

நிர்மல்குமார் பொய் செய்திகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Satire

Sources

Tweet from @BJP4TamilNadu dated March 5, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

14,935

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage