Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
கன்னியாகுமரியில் பாஜக வெற்றிக்கு அண்ணாமலை இனிஷியல் போடக்கூடாது என்று பொன். இராதாகிருஷ்ணன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு, நாதக, பாமக உள்ளிட்ட கட்சிகளை காட்டிலும் அதிக இடங்களில் வென்றுள்ளது. அதிலும் குறிப்பாக மற்ற மாவட்டங்களை காட்டிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக இடங்களில் வென்றுள்ளது பாஜக.
இந்நிலையில், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரியில் பாஜக வெற்றிக்கு அண்ணாமலை இனிஷியல் போடக்கூடாது. கன்னியாகுமரி என் குழந்தை, அதை வளர்த்தவன் நான்“ என்று பொன்.இராதாகிருஷ்ணன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.



Also Read: ஏடிஎம் பின்னை தலைகீழாக அழுத்தினால் காவல்துறையினருக்கு எச்சரிக்கை போகுமா?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
கன்னியாகுமரியில் பாஜக வெற்றிக்கு அண்ணாமலை இனிஷியல் போடக்கூடாது என்று பொன். இராதாகிருஷ்ணன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், இந்த நியூஸ்கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். இதில் தந்தி தொலைக்காட்சி வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் துறையினரைத் தொடர்புக்கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம். இதற்கு அவர்கள், ”இது பொய்யான நியூஸ்கார்ட், இதை நாங்கள் வெளியிடவில்லை” என்று விளக்கமளித்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழக பாஜகவின் சமூக ஊடக அணி தலைவர் நிர்மல் குமாரைத் தொடர்பு கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டதற்கு, இத்தகவல் பொய்யானது என்று பதிலளித்தார்.
Also Read: உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை என் தோளிலா கொண்டு வர முடியும் என்றாரா நிர்மலா சீதாராமன்?
கன்னியாகுமரியில் பாஜக வெற்றிக்கு அண்ணாமலை இனிஷியல் போடக்கூடாது என்று பொன். இராதாகிருஷ்ணன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும். இதனை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Thanthi Tv
Nirmalkumar, BJP
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 20, 2024
Vijayalakshmi Balasubramaniyan
June 14, 2024
Ramkumar Kaliamurthy
June 13, 2024