Fact Check
முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்தாரா அர்ஜூனமூர்த்தி?
நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பிக்கவிருக்கும் புதிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும், பாஜகவின் முன்னாள் அறிவுசார் துறைத் தலைவராகவிருந்த அர்ஜூனமூர்த்தி, முரசொலி மாறனிடம் அரசியல் ஆலோசகராக இருந்தவர் என்று ஒரு புகைப்படச் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Fact Check/Verification:
பிரபல நடிகரான ரஜினிகாந்த் அரசியல் களத்தில் குதித்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, வருகின்ற ஜனவரி மாதம் தான் புதிய கட்சியைத் துவங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில், அவர் துவங்கவிருக்கும் தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூனமூர்த்தி என்பவரை நியமித்துள்ளார்.
அர்ஜூனமூர்த்தி யார் எனில், கடந்த சில நாட்கள் வரையில் பாஜகவின் அறிவுசார்த் துறைத் தலைவராக பதவி வகித்தவர் அவர். ரஜினிக்கு தனது புதிய பதவிக்காக அவர் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த மறைந்த திரு. முரசொலி மாறனும் அர்ஜூனமூர்த்தியும் மிகச்சிறந்த நண்பர்கள் எனவும், அவர் முரசொலி மாறனுக்கு அரசியல் ஆலோசகராகவும் இருந்தார் எனவும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
எனவே, வைரலாகி வருகின்ற இப்புகைப்படச் செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்:
முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் அர்ஜூனமூர்த்தி எனவும், அவர்கள் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படம் எனவும் பரவும் செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆராய்ந்தோம்.
அந்த ஆய்வின் முடிவில் அப்புகைப்படத்தில் முரசொலி மாறனுடன் இருப்பவரின் பிளாக் பதிவு நமக்குக் கிடைத்தது. குறிப்பிட்ட புகைப்படத்தில் முரசொலி மாறனுடன் இருப்பவர் 2011ம் ஆண்டில் திராவிடப் பேரவையின் பொதுச்செயலாளராக இருந்த நந்திவர்மன் என்பது நமக்குத் தெரியவந்தது.
மேற்கண்ட புகைப்படம், முரசொலி செல்வம் அவர்களது வீட்டில் 1970ம் ஆண்டோ அல்லது அதற்குப்பிறகோ எடுக்கப்பட்டது என்று நந்திவர்மனே தனது வலைப்பூ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், பலரும் பதிவிட்டுருப்பது போன்று திமுகவின் முரசொலி மாறனுக்கும் அர்ஜூனமூர்த்திக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று வைரல் புகைப்படம் தொடர்பான மறுப்பைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் முரசொலி மாறனின் மகனான திமுக எம்.பி தயாநிதி மாறன்.
Conclusion:
எனவே, வைரலாகும் புகைப்படச்செய்தியில் கூறப்படுவது போல அர்ஜூனமூர்த்தி, முரசொலிமாறனின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் அல்ல என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources:
Twitter: (Dayanidhi Maran): https://twitter.com/Dayanidhi_Maran/status/1334781681023107072?s=20
Nandivarman WP blog: https://nandhivarman.wordpress.com/2011/07/08/murasoli-maran-one-man-think-tank/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)