Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
நடிகர் விஜயின் ‘பீஸ்ட்’ பட பாடலுக்கு பாஜக மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தின் முதல் சிங்கிளான ‘அரபிக் குத்து’ இம்மாதம் 14 ஆம் தேதி வெளியிடவிருப்பதாக நேற்று படக்குழு அறிவித்தனர்.
இந்நிலையில், “அரேபிய குத்து என்ற பெயரில் இஸ்லாமிய இசையையும், அரேபிய வார்த்தைகளையும் பயன்படுத்தி தமிழை அழிக்க துடிக்கும் நடிகர் ஜோசப் விஜய்யை வன்மையாக கண்டிக்கின்றேன்” என்று ஹெச்.ராஜா அவர்கள் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



Also Read: வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் பின்னடைவு; திமுக ஆட்சி காரணமா?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
‘பீஸ்ட்’ பட பாடலுக்கு ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்த ஆய்வில் ஈடுபட்டோம். தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், முன்னதாக இந்த நியூஸ்கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இந்த தேடலில் தந்தி தொலைக்காட்சி இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த ஒரு தரவும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் துறையினரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டடோம். அதற்கு அவர்கள், இது பொய்யான நியூஸ்கார்ட். இதை நாங்கள் வெளியிடவில்லை என பதிலளித்தனர்.
இதனையடுத்து பாஜக ஐடி விங் தலைவர் சிடிஆர் நிர்மல் குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டோம். இதற்கு அவர்,
“இது பொய்யான செய்தி. இவ்வாறு ஹெச்.ராஜா பேசவில்லை.”
என பதிலளித்தார்.
Also Read: தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் ஹெச்.ஐ.வி வைரஸை பரப்புகின்றனரா?
நடிகர் விஜயின் ‘பீஸ்ட்’ பட பாடலுக்கு பாஜக மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்ததாக பரவும் நியூஸ்கார்ட் முற்றிலும் பொய்யானதாகும். இதனை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Thanthi TV
CTR Nirmalkumar, BJP
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 20, 2024
Vijayalakshmi Balasubramaniyan
June 14, 2024
Ramkumar Kaliamurthy
June 13, 2024