Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இஸ்லாமியர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், விலங்குகளைக் கொன்று ஏழைகளுக்கு பகிர்ந்தளிப்பது தவறில்லை என்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ட்விட் பதிவிட்டதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

உலக பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும் ஆனவர் பில்கேட்ஸ். கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் இவரது முதலீடு முதன்மையாகக் கருத்தப்படுகிறது. அது தொடர்பான சர்ச்சைகளும் அதிகம்.
இந்நிலையில், “தினந்தோறும் மில்லியன் கணக்கில் ஆடுகளும் மாடுகளும் கேஎஃப்சியில், மெக்னோடால்ஸில், பர்கர் கிங்கில் வெட்டப்பட்டு ஏழை நடுத்தர மக்களின் பணத்தை பிடுங்கி கோடீஸ்வரர் ஆகின்றனர் முதலாளிகள். ஆனால் முஸ்லிம்கள் ஈதுல் அல்ஹா பண்டிகையில் பெரும் செல்வந்தர்கள் ஆடுகளையும் மாடுகளையும் அறுத்து ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கின்றனர். இங்கும் முஸ்லிம்களை குறை கூறுவோர் மூளையை அடகு வைத்தவர்களே” என்று பில்கேட்ஸ் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஆங்கிலத்தில் பதிவிட்டதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக, ஈதுல் அல்ஹா பண்டிகையின்போது விலங்குகளைப் பலியிட்டு ஏழைக்களுக்கு பகிர்ந்தளிப்பது தவறில்லை என்று பில்கேட்ஸ் பதிவிட்டதாகப் பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்து ஆய்வு செய்தோம்.
முதலில் பில்கேட்ஸ் முஸ்லிம்கள் குறித்தும், விலங்குகளைப் பலியிடுவது குறித்தும் ஏதேனும் பதிவிட்டிருக்கிறாரா என்று ஆய்வு நடத்தினோம். ஆனால், அவரது ட்விட்டர் பக்கத்தில் அப்படி எந்தப் பதிவும் நமக்குக் காணக் கிடைக்கவில்லை. மேலும், சர்வதேச செய்திகளிலும் பில்கேட்ஸ் இவ்வாறு கூறியதாக செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.
தொடர்ந்து ட்விட்டரில் அவரது பதிவு என்று பரவும் வாக்கியங்களை வைத்து தேடியபோது கடந்த 2019ம் ஆண்டு, ஆகஸ்ட் 10 அன்று, Wolfie babiee என்கிற ட்விட்டர் பதிவர் ஒருவர் இதே வாக்கியங்களை பதிவாக இட்டுள்ளார். அவருடைய சொந்தக் கருத்தான இந்த ட்விட், 48 ஆயிரம் பேரால் ரீட்விட் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த ட்விட், பில்கேட்ஸ் பெயரில் போட்டோஷாப் செய்யப்பட்டு கடந்த 2019ம் ஆண்டு முதலேயே வைரலாக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக, ஈதுல் அல்ஹா பண்டிகையின்போது விலங்குகளைப் பலியிட்டு ஏழைக்களுக்கு பகிர்ந்தளிப்பது தவறில்லை என்று பில்கேட்ஸ் பதிவிட்டதாகப் பரவும் செய்தி தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Bill gates: https://twitter.com/BillGates
Twitter: https://twitter.com/WolfieBabiee/status/1160255480209596416?s=20
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
April 13, 2024
Ishwarachandra B G
April 10, 2024
Ramkumar Kaliamurthy
December 8, 2023