Fact Check
பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷமிடுபவர்களுக்கு எதிராக பேசிய மபி முதல்வர் என்று பரவும் பாஜக எம்எல்ஏ வீடியோ!
Claim: பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷமிடுபவர்களுக்கு எதிராக பேசிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்
Fact: வைரலாகும் வீடியோவில் பேசியிருப்பவர் பாஜக எம்எல்ஏ ரமேஷ்வர் ஷர்மா ஆவார்.
பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷமிடுபவர்களுக்கு எதிராக பேசிய மத்திய பிரதேச முதல்வர் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”முஸ்லிம்கள் உங்களுடைய வழிபாடுகளை உங்கள் முறைப்படி செய்வது எங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆனால் இது இந்துஸ்தான் இங்கு பாகிஸ்தான் வாழ்க ஆப்கானிஸ்தான் ஜிந்தாபாத்னு சப்போர்ட் பண்ற வேலையெல்லாம்கூடாது அங்கேயே போயிருங்க. இங்க ஒழுக்கமா இந்தியனா இருங்க இல்லனா அட்ரஸ் இல்லாம போயிருவீங்க – மபி முதலமைச்சர்” என்று இந்த வீடியோ வைரலாகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஜனவரி 1ஆம் தேதி முதல் வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என்று பரவும் தகவல் உண்மையா?
Fact Check/Verification
பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷமிடுபவர்களுக்கு எதிராக பேசிய மத்திய பிரதேச முதல்வர் என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது, அதில் இடம்பெற்றிருப்பவர் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் அல்ல என்று நம்மால் அறிய முடிந்தது.
கடந்த ஆகஸ்ட் 23, 2021 அன்று ETV Bharath-ல், “BJP MLA stokes row after saying ‘let them spend a few days in Taliban” என்கிற தலைப்பில் இந்த வீடியோ இடம்பெற்றிருந்தது.
உஜ்ஜைனியில் மொஹரம் பண்டிகையொட்டி எழுப்பப்பட்ட பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷத்திற்கு எதிராக பாஜக எம்எல்ஏவான ரமேஷ்வர் ஷர்மா என்பவர் இவ்வாறு சர்ச்சையான கருத்தைப் பேசியுள்ளார் என்பதை அறிய முடிந்தது.


இந்த வீடியோவை எடுத்தே மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவின் பேச்சு என்று பரப்பி வருகின்றனர் என்பது நமக்கு உறுதியானது.
Also Read: பாஜகவுக்கு ஓட்டு போடாத சென்னை மக்களுக்கு ₹5000 கோடி நிவாரண நிதி தர முடியாது என்றாரா அண்ணாமலை?
Conclusion
பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷமிடுபவர்களுக்கு எதிராக பேசிய மத்திய பிரதேச முதல்வர் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
YouTube Video From, ETV Bharat, Dated August 23, 2021
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)