Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பாஜகவினர் திமுகவை எதிர்த்து கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி கட்டுடன் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தை கிண்டலடிக்கும் வகையில் நெட்டிசன்கள் பலர் சமூக வலைத்தளங்களங்களில் பதிவுகள் இட்டு வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமை(21/10/2020) அன்று சுவர் விளம்பரம் செய்வதில் ஏற்பட்ட பிரச்சனைக் காரணமாக பாஜக மற்றும் திமுகவினருடையே மிகப்பெரியத் தகராறு ஏற்பட்டது. வாய்த் தகராறில் தொடங்கிய இப்பிரச்சனை கடைசியில் கைக்கலப்பில் போய் முடிந்தது.
இப்பிரச்சனைக் குறித்துப் புதிய தலைமுறையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இப்பிரச்சனையின் தொடர்ச்சியாக பாஜகவினர் கை, மற்றும் தலையில் கட்டுப் போட்டப்படி செப்டம்பர் 22 அன்று போராட்டங்களில் ஈடுபட்டனர். இவ்விஷயம்தான் தற்போது நெட்டிசன்கள் பலரால் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.
அடியே படாமல் பொய்க்கட்டுகளை அணிந்தபடி பாஜகவினர் நாடகமாடுவதாக கூறி நெட்டிசன்கள் பலர் பாஜகவினரை சமூக வலைத் தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.
நெட்டிசன்கள் கிண்டலடிக்கப்படும் இச்சம்பவத்தின் உண்மையானப் பின்னணி என்ன என்பதை அறிய இவ்விஷயத்தை நியூஸ் செக்கர் சார்பில் ஆராய்ந்தோம்.
கேலிக்குள்ளான இச்சம்பவத்தின் உண்மைத் தன்மைக் குறித்த அறிய, இச்சம்பவம் குறித்து கூகுளில் தேடினோம்.
நம் தேடலில் தமிழக பாஜகவின் மாநிலச் செயலாளராக விளங்கும் சுமதி வெங்கடேஷ் அவர்கள் இச்சம்பவம் குறித்துத் தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.
அதில்,
நேற்று திமுக அராஜகத்தை கண்டித்து நடந்த போராட்டத்தின்போது பாஜக நிர்வாகிகள் அனைவரும் திமுகவின் அராஜகத்தை மக்களிடம் எடுத்துக் காட்டும் விதமாக கை மற்றும் தலையில் கட்டு அணிவித்து போராட்டம் நடத்தினோம்.
இதை சில நபர்கள் தவறாக சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதுபோன்ற முயற்சிகளால் எந்தவிதப் பலனையும் அவர்கள் அடையப் போவதில்லை.
திமுகவின் அராஜகத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது எங்களது கடமை
என்று பதிவிட்டிருந்தார்.
சுமதி அவர்களின் டிவிட்டர் பதிவின் மூலம், திமுகவினருடன் ஏற்பட்ட தகராறுக்கும் பாஜகவினர் அணிந்திருந்த கட்டுகளுக்கும் எவ்வித தொடர்பில்லை என்றும் திமுகவினருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே இவ்வாறு ஒரு நூதனப் போராட்டம் பாஜகவினரால் நடத்தப்பெற்றுள்ளது என்றும் நமக்குத் தெளிவாகிறது.
வரும் 2021 பொதுத் தேர்தலில் தங்களது இருப்பை நிலைநிறுத்த பாஜக தொடர்ந்து பல நடவடிக்கைகளை தீவிரமாக செய்து வருகிறது. அந்நடவடிக்கைகள் யாவும் சமூக வலைத்தளங்களில் கேலிக்குள்ளாகுவதும் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
இதேபோல்தான் பாஜகவின் இந்தப் போராட்டமும் கேலிக்குள்ளாகி உள்ளது என்று நம் விசாரணையின் மூலம் தெளிவாகியுள்ளது.
Twitter Profile: https://twitter.com/Samaniyantweet/status/1308655455669952512
Twitter Profile: https://twitter.com/sivanandam502/status/1308456469352738816
Sumathi Venkatesh’s Twitter Profile: https://twitter.com/SumathiVenkat18/status/1308743489954279425
Puthiya Thalaimurai YouTube Channel: https://www.youtube.com/watch?v=i_IINSRBXYI
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
June 20, 2024
Vijayalakshmi Balasubramaniyan
June 12, 2024
Vijayalakshmi Balasubramaniyan
May 27, 2024