Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
கொரோனா வைரஸ் ஒரு பருவ கால வைரஸ் என்று உலக சுகாதார மையம் கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
பருவகால மாற்றத்தினாலே இருமல், சளி மற்றும் தொண்டை எரிச்சல் போன்றவை ஏற்படுகின்றது. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவோ, சமூக இடைவெளி கடைப்பிடிக்கவோ தேவையில்லை. இந்நோய் ஒரு நோயாளியிடமிருந்து மற்றவருக்கும் பரவாது என்றும் உலக சுகாதார மையம் கூறியதாகவும் அத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கோவிட் குறித்த செய்திகளைப் பகிரும் வாட்ஸ் அப் குழுக்கள் மீது நடவடிக்கை என்கிற செய்தி உண்மையா?
கொரோனா வைரஸ் ஒரு பருவ கால வைரஸ் என்று உலக சுகாதார மையம் கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக உலக சுகாதார மையம் இவ்வாறு தெரிவித்துள்ளதா என்று தேடியதில் அண்மையில் உலக சுகாதார மையம் வெளியிட்ட பத்திரிக்கை செய்தி ஒன்றை காண முடிந்தது. அதில் கோவிட் – 19 தொற்றால் பாதிக்கப்பட்டகளின் எண்ணிக்கை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பப்பவர்களின் எண்ணிக்கை, மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 12 மாதங்களை ஒப்பிடுகையில் தற்போது மிகவும் குறைந்துள்ளதாகவும், ஆனால் புதிய வகை வைரஸ் காரணமாக இந்நிலை மாறலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இச்செய்தியில் எந்த ஒரு இடத்திலும் கொரோனா வைரஸ் ஒரு பருவ கால வைரஸ் என்று குறிப்பிட்டிருக்கவில்லை.
இதனையடுத்து வைரலாகும் வீடியோவில் காணப்படுபவர்கள் குறித்து தேடினோம். இதை அந்நபர்கள் World Doctors Alliance எனும் அமைப்பை சார்ந்தவர்கள் என்பதை அறிய முடிந்தது. இந்த அமைப்பானது ஒரு தனியார் அமைப்பு என்பதையும், இதற்கும் உலக சுகாதார மையத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதையும் அறிய முடிநதது.
தொடர்ந்து தேடியதில் வைரலாகும் வீடியோவில் காணப்படுபவர்கள் கூறும் கருத்துகள் தவறானது என்பதை கார்டியன் மற்றும் அசோசியேட்டெட் பிரஸ் உரிய ஆதாரங்களுடன் விளக்கி செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
அதேபோல் இத்தகவல் பொய்யானது என்று Press Information Bureau (PIB) மறுப்பு தெரிவித்து, PIB Factcheck டிவிட்டர் தளத்தில் டிவீட் செய்திருப்பதையும் காண முடிந்தது.
கொரோனா வைரஸ் ஒரு பருவ கால வைரஸ் என்று உலக சுகாதார மையம் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
இந்த செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் பிரசுரமாகியுள்ளது.
Sources
World Doctors Alliance website
Guardian report, October 21, 2021
AP report, October 23, 2020
WHO report, December 1, 2022
PIB Factchech Tweet, November 06, 2020
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 30, 2023
Ramkumar Kaliamurthy
November 6, 2023
Ramkumar Kaliamurthy
February 28, 2023