Fact Check
மங்களூர் தேரடி வீதியில் தங்கக்காசுகள் கிடைத்ததா?
மங்களூர் தேரடி வீதியில் தங்கக் காசுகள் கிடைத்ததாகச் செய்தி ஒன்று வாட்சாப் மூலம் பரவி வருகிறது.

Fact Check/Verification
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மங்களூரின் தேரடி விதியில் தங்கக் காசுகள் கிடைத்ததாக வாட்சப்பில் செய்தி ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.
இதுக்குறித்து வாசகர் ஒருவர், நம் நியூஸ்செக்கரின் பிரத்தியேக வாட்சாப் எண்ணான, 9999499044 என்ற எண்ணைத் தொடர்புக் கொண்டு, இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்துக் கேட்டார். கூடவே வாட்சப்பில் பகிரப்படும் புகைப்படங்களையும் நம்முடன் பகிர்ந்துக் கொண்டார்.
அப்படங்கள் உங்கள் பார்வைக்காக:
நம் வாசகர் நம்மிடம் கேட்ட இக்கேள்விக்கு விடைக் காண, இச்செய்தியைக் குறித்து நியூஸ்செக்கர் சார்பில் ஆராய முனைந்தோம்.
உண்மை என்ன?
மங்களூர் தேரடி வீதியில் தங்கக்காசுகள் கிடைத்ததாகப் பரவும் செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இதுக்குறித்துச் செய்திகள் ஏதேனும் ஊடகங்களில் வந்துள்ளதா என்பதை முதலில் ஆராய்ந்தோம்.
ஆனால் இதுத்தொடர்பாக எந்த ஒரு செய்தியும் எந்த ஊடகத்திலும் வரவில்லை என்பது நம் ஆய்வில் தெரிய வந்தது. எனவே ஆய்வின் அடுத்தக் கட்டமாக, இச்செய்தியுடன் பரப்பப்படும் புகைப்படங்களை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆராய்ந்தோம்.
அவ்வாறு ஆராய்ந்ததில் பரவும் இத்தகவல் முற்றிலும் தவறானது என்ற உண்மையை நம்மால் அறிய முடிந்தது.
உண்மையில் இத்தங்கக்காசுகள் 2018 ஆம் ஆண்டு இத்தாலியில் கிடைத்ததாகும். இதுக்குறித்தச் செய்தி CNN-யில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்தச் செய்தி, மேலும் பல இணையத் தளங்களில் வந்திருந்ததையும் நம்மால் காண முடிந்தது.

Conclusion
நம் விரிவான விசாரணைக்குப்பின் தெளிவாகுவது எனனவென்றால், மங்களூரில் தங்கக்காசுகள் கிடைத்ததென்று பரவும் செய்தி முற்றிலும் பொய்யாகும். 2018 ஆம் ஆண்டு இத்தாலியில் கிடைத்தத் தங்கக் காசுகளை மங்களூரில் கிடைத்ததாக தவறானத் தகவல் பரப்பப்படுகிறது.
Result: Misleading
Our Sources
CNN: https://edition.cnn.com/style/article/roman-gold-coins-italy-cressoni-theater-trnd/index.html
Newscheker WhatsApp
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)



