Fact Check
ஹெச்.ராஜா பெட்ரோல், டீசல் விலையுயர்வை கண்டித்து ஊர்வலம் சென்றாரா?
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஹெச்.ராஜா அவர்கள் மாட்டு வண்டியில் ஊர்வலம் சென்றதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது.

Fact Check/ Verification
வரும் 2021 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் பரபரப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அனைத்து கட்சிகளும் மக்களிடம் நன்மதிப்பை பெற விதவிதமான வாக்குறுதிகளை கூறி வருகிறது. கூடவே போராட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றையும் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் தமிழக பாஜகவின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான ஹெச்.ராஜா அவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மாட்டு வண்டியில் ஊர்வலம் சென்றதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இப்புகைப்படத்தின் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இப்புகைப்படம் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஹெச்.ராஜா அவர்கள் மாட்டு வண்டியில் ஊர்வலம் சென்றதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம்.
இதன்பின் இப்புகைப்படத்தின் பின்னணியில் இருந்த உண்மையை நம்மால் அறிய முடிந்தது.
பாஜகவைச் சார்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் ‘நம்ம ஊரு பொங்கல்’ எனும் தலைப்பில் பொங்கல் விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.
ஹெச்.ராஜா அவர்கள் கடந்த சனிக்கிழமை அன்று சிவகங்கை நடந்த பொங்கல் விழாவில் கலந்துக் கொண்டார். இந்நிகழ்வின்போதே மாட்டு வண்டியில் பயணம் செய்துள்ளார்.
இதுக்குறித்து ஹெச்.ராஜா அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தப் பதிவில் பயன்படுத்திய புகைப்படத்தை வைத்தே, ஹெச்.ராஜா அவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மாட்டு வண்டியில் ஊர்வலம் சென்றதாக சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து பதிவு செய்து வருகின்றனர் என்பதை நம் ஆய்வின் மூலம் அறிய முடிந்தது.
Conclusion
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஹெச்.ராஜா அவர்கள் மாட்டு வண்டியில் ஊர்வலம் சென்றதாக பரப்பப்படும் புகைப்படம், அவர் பொங்கல் விழாவில் கலந்துக் கொண்டபோது எடுக்கப்பட்டதாகும்.
ஹெச்.ராஜா அவர்களை கிண்டல் செய்யும் நோக்கில் இவ்வாறு ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் பரப்படுகின்றது. இதை நாம் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Satire
Our Sources
Facebook Profile: https://www.facebook.com/angelsuee.suseela/posts/902757187150888
Facebook Profile: https://www.facebook.com/uma.gamesan/posts/732932027642511
H.Raja: https://twitter.com/HRajaBJP/status/1347966126303531010
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)