Fact Check
கொடநாடு கொலை வழக்கு விசாரணையை நிறுத்தினால் நீட் விலக்கு மசோதாவிற்கு ஆதரவு அளிப்போம் என்றாரா எடப்பாடி பழனிச்சாமி?
கொடநாடு கொலை வழக்கு விசாரணையை நிறுத்தினால் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவளிக்கத் தயார் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தமிழ்நாடு சட்டசபையில் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தர விலக்கு கோரும் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்த மசோதாவிற்கு எதிர்கட்சியான அதிமுக ஆதரவு அளித்தது; ஆனால், மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவைச் சேர்ந்த தமிழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
Also Read: திராவிடத்தை வீழ்த்த ஆரியத்தை கைக்கொள்வது ஒன்றும் தவறில்லை என்றாரா சீமான்?
இந்நிலையில், “கொடநாடு கொலை வழக்கு விசாரணையை நிறுத்தினால் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவளிக்கத் தயார்- சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி” என்கிற நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification:
கொடநாடு கொலை வழக்கு விசாரணையை நிறுத்தினால் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவளிக்கத் தயார் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அப்போது, அதே வாசகங்களுடன் சன் நியூஸ் நிறுவன நியூஸ் கார்டு ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது நமக்குத் தெரிய வந்தது. எனவே, இரண்டு நியூஸ் கார்டுகள் குறித்தும் ஆராய்ந்தபோது இரண்டுமே போலியானது; எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குத் தெளிவானது.
புதிய தலைமுறையின் ஒரிஜினல் நியூஸ் கார்டில், “நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவை அதிமுக ஆதரிக்கும். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி” என்கிற செய்தி இடம் பெற்றுள்ளது.
அதேபோன்று சன் நியூஸின் ஒரிஜினல் நியூஸ் கார்டில், “நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது; எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்த நிலையில் அதிமுக வெளிநடப்பு” என்கிற செய்தி இடம்பெற்றுள்ளது.
Conclusion:
கொடநாடு கொலை வழக்கு விசாரணையை நிறுத்தினால் நீட் விலக்கு மசோதாவிற்கு ஆதரவளிக்கத் தயார் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
PT:
https://www.facebook.com/PutiyaTalaimuraimagazine/photos/2308942079262687
Sun News: https://www.facebook.com/SunNewsTamil/photos/a.500433350013386/4621825551207458/?type=3
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)