Fact Check
சிதம்பரம் தீட்சிதர்களை மீறி மக்கள் கனகசபையில் கால் வைக்க கூடாது என்றாரா அண்ணாமலை?
Claim: தீட்சிதர்களை மீறி பொதுமக்கள் கனகசபையில் கால் வைத்தால் அண்ணாமலையின் சிங்கமுகத்தைத் தமிழகம் பார்க்கும் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.
சிதம்பரம் தீட்சிதர்களை மீறி மக்கள் கனகசபையில் கால் வைக்கக்கூடாது என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“தீட்சிதர்களைச் சீண்டவேண்டாம்; அண்ணாமலை. தீட்சிதர்களை மீறி பொதுமக்கள் கனகசபையில் கால் வைத்தால் அண்ணாமலையின் சிங்கமுகத்தைத் தமிழகம் பார்க்கும் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை” என்று நியூஸ்கார்ட் வைரலாகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடித்ததும் தக்காளி விலை குறையும் என்றாரா நிர்மலா சீதாராமன்?
Fact Check/Verification
சிதம்பரம் தீட்சிதர்களை மீறி மக்கள் கனகசபையில் கால் வைத்தால் என்னுடைய சிங்க முகத்தை தமிழகம் பார்க்கும் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படம் புதியதலைமுறை பெயரில் பரவி வருகின்ற நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் ஆராய்ந்தோம். அதன் முடிவில், “தீட்சிதர்களுக்காக போராடுவேன்: அண்ணாமலை சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு தமிழக அரசு தொந்தரவு கொடுத்தால் போராடுவேன். தீட்சிதர்கள் விவகாரத்தில் அவர்களுக்கு எந்தவித தொந்தரவும் மாநில அரசு கொடுக்க கூடாது – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை” என்கிற பெயரில் நியூஸ்கார்ட் ஒன்று வெளியாகியிருந்தது.
குறிப்பிட்ட நியூஸ்கார்டை எடிட் செய்தே வைரலாகும் நியூஸ்கார்ட் பரவுகிறது என்பது நமக்கு அதன் புகைப்படம் மற்றும் வடிவமைப்பு மூலமாக உறுதியாகியது.


மேலும், பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையின் அறிக்கையிலும் புதியதலைமுறை வெளியிட்டிருந்த அதிகாரப்பூர்வ நியூஸ்கார்டில் இருந்த தகவலே இடம்பெற்றிருந்தது.
தொடர்ந்து, வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் இவானியைத் தொடர்பு கொண்டு கேட்டோம். அப்போது அவர், “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது” என்று உறுதி செய்தார்.
Also Read: லண்டனில் ஆர்.கே.சுரேஷை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய அண்ணாமலை என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!
Conclusion
சிதம்பரம் தீட்சிதர்களை மீறி மக்கள் கனகசபையில் கால் வைத்தால் என்னுடைய சிங்க முகத்தை தமிழகம் பார்க்கும் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Image
Our Sources
Facebook Post From, Puthiyathalaimurai, Dated July 2, 2023
Phone Conversation With, Ivani, Puthiyathalaimurai, Dated July 5, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)