Fact Check
தேர்தல் அரசியலில் வெற்றி பெறாத அண்ணாமலை எனக்கு அறிவுரை கூறக்கூடாது என்றாரா தமிழக ஆளுநர்?
Claim: அண்ணாமலை எனக்கு அறிவுரை கூற தேவையில்லை – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
தேர்தல் அரசியலில் வெற்றி பெறாத அண்ணாமலை எனக்கு அறிவுரை கூற தேவையில்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
”தேர்தல் அரசியலில் வெற்றி பெற முடியாத அண்ணாமலை நான் அரசியல் பேசக்கூடாது என்று அறிவுரை கூற தேவையில்லை. நாக்பூரின் உத்தரவுப்படியே நான் நடக்கின்றேன் தமிழ் நாடு ஆளுநர் ஆர். என்.ரவி” என்று இந்த நியூஸ்கார்ட் பரவி வருகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடித்ததும் தக்காளி விலை குறையும் என்றாரா நிர்மலா சீதாராமன்?
Fact Check/Verification
தேர்தல் அரசியலில் வெற்றி பெறாத அண்ணாமலை எனக்கு அறிவுரை கூற தேவையில்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் News 18 தமிழ்நாடு பெயரில் பரவி வருகின்ற நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம்.
அதில், “ஆளுநர் அரசியல் பேசக்கூடாது: அண்ணாமலை தமிழ்நாட்டின் ஒவ்வொரு பிரச்னைக்கும் பதில்சொல்ல ஆளுநர் அரசியல்வாதி அல்ல ஆளுநர் செய்தியாளரை சந்திப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். ஆளுநர் அரசியல் பேசக்கூடாது, கடமையைச் செய்ய வேண்டும் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை” என்று நியூஸ்கார்ட் ஒன்று வெளியாகியிருந்தது.
குறிப்பிட்ட நியூஸ்கார்டினை எடுத்தே வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டு பரவுகிறது என்பது இதன்மூலம் தெளிவாகியது.


தொடர்ந்து, இதுகுறித்து நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி ஆசிரியர் கார்த்திகைச்செல்வனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது” என்று உறுதி செய்தார்.
Also Read: ஜாக்கி சான் சண்டைக் காட்சிகளில் சந்தித்த விபத்துகளை அவரது மகளுக்கு காட்டினாரா?
Conclusion
தேர்தல் அரசியலில் வெற்றி பெறாத அண்ணாமலை எனக்கு அறிவுரை கூற தேவையில்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Image
Our Sources
Tweet from News 18 Tamil Nadu, Dated July 05, 2023
Phone Conversation with Karthigai Selvan, News 18 TN Head, Dated July 06, 2023
YouTube Video From, Puthiyathalaimurai, Dated July 05, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)