Fact Check
ஆன்லைன் விளையாட்டு மூலமாக 15 லட்ச ரூபாய் வென்ற மாணவர் என்று செய்தி வெளியிட்டதா நியூஸ் 7 தமிழ்?
Claim: சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் 15 லட்சத்தை வென்றுள்ளார் – நியூஸ் 7 செய்தி
Fact: இத்தகவல் தவறானது என்று நியூஸ் 7 தமிழ் ஊடகம் விளக்கமளித்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டு மூலமாக 15 லட்ச ரூபாய் வென்ற மாணவர் என்று நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் 15 லட்சத்தை வென்றுள்ளார் ” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்தியா கூட்டணியின் மும்பை பொதுக்கூட்டத்தின் வீடியோவா இது?
Fact Check/Verification
ஆன்லைன் விளையாட்டு மூலமாக 15 லட்ச ரூபாய் வென்ற மாணவர் என்று பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதாகப் பரவிய நிலையில் அதனை உண்மை என்று பலரும் ஷேர் செய்து வருகின்றனர். ஆனால், ஆன்லைன் விளையாட்டிற்கு விளம்பரம் செய்யும் வகையில் நியூஸ் 7 நியூஸ்கார்டினை உபயோகித்துள்ளனர் என்பது நமக்கு உறுதியாகியது.
நியூஸ் 7 தமிழின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில், “இந்த செய்தியை நியூஸ்7 தமிழ் வெளியிடவில்லை” என்றும் குறிப்பிட்ட நியூஸ்கார்ட் போலியானது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Also Read: மகாலட்சுமி திட்டம் குறித்து காங்கிரஸ் வெளியிட்ட விளம்பர வீடியோவா இது?
Conclusion
ஆன்லைன் விளையாட்டு மூலமாக 15 லட்ச ரூபாய் வென்ற மாணவர் என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Facebook Post by, News 7 Tamil, Dated may 19, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)