Fact Check
Fact Check: அமைச்சர் சக்கரபாணியின் காலில் விழுந்த மாணவிகள் என்று பரவும் தவறான செய்தி!
Claim: அமைச்சர் காலில் விழுந்த அரசுப் பள்ளி மாணவிகள்.
Fact: ஊடகம் வெளியிட்ட செய்தி தவறானதாகும். மாணவிகள் அமைச்சர் காலில் விழவில்லை; வழியில் கிடக்கும் பொருட்களை நகர்த்தி வைத்துள்ளனர்.
அமைச்சர் சக்கரபாணியின் காலில் விழுந்த மாணவிகள் என்று செய்தி ஒன்று ஊடகங்களில் பரவி வருகிறது.

NewsTamil 24X7 என்கிற செய்தி நிறுவனம் “அமைச்சர் சக்கரபாணி காலில் விழுந்த அரசு பள்ளி மாணவிகள். வீடியோவை பதிவிட்டு மகளிர் தின வாழ்த்துக்கள்” என்பதாக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டிருந்த மகளிர் தின வாழ்த்தைத் தொடர்ந்து இந்த செய்தி பரவியது.
ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check / Verification
அமைச்சர் சக்கரபாணியின் காலில் விழுந்த மாணவிகள் என்று செய்தி பரவிய நிலையில் அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டிருந்த மகளிர் தின வாழ்த்து பதிவை ஆராய்ந்தபோது, அவர் வாழ்த்து சொல்லும் மாணவிகள் வழியில் இருக்கும் புத்தகம், பொருட்களை நகர்த்தி வைப்பது வீடியோவில் தெளிவாக இடம்பெற்றுள்ளது நமக்குத் தெரிய வந்தது.
தொடர்ந்து, இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள அமைச்சர் சக்கரபாணி, “சமத்துவம், பெண்ணுரிமை உள்ளிட்ட கொள்கைகளை முன்னிறுத்தும் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் நாங்கள். யாரும் எவர் காலிலும் விழக் கூடாது என்பதே எங்களது கோட்பாடு. பள்ளியில் ஆய்வு மேற்கொண்டிருந்த போது மாணவிகளுக்கு மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தேன்.
அப்போது, மாணவிகள் சிலர் பாதையில் இருந்த பொருட்களை நகர்த்தி வைத்ததை எனது காலில் விழுவது போல சித்தரித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ள செய்தி ஊடகத்திற்கு கண்டனங்கள் மற்றும் இதன்மீத் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அவரது பதிவைத் தொடர்ந்து செய்தி நிறுவனம் அந்த வீடியோவை நீக்கியுள்ளது.
Conclusion
அமைச்சர் சக்கரபாணியின் காலில் விழுந்த மாணவிகள் என்பதாக வெளியாகிய செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Twitter Post From, Minister R.Sakkarapani, Dated March 08, 2023
Twitter Post From, Minister R.Sakkarapani, Dated March 10, 2023
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.