Fact Check
காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்கின்றதா ரோட்டரி சங்கம்?
Claim: காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் இலவச அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது.
Fact: இத்தகவல் தவறானது என்று ரோட்டரி சங்கத் தரப்பு தெளிவு செய்துள்ளது.
“பிறப்பிலிருந்தே காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர் என்று உங்களுக்குத் தெரிந்தால், இப்போது காக்லியர் இம்ப்லாண்ட் அறுவை சிகிச்சையின் கண்டுபிடிப்பால் இந்த ஊனமுற்ற குழந்தையை குணப்படுத்த முடியும்.
அறுவை சிகிச்சைக்கு கிட்டத்தட்ட 10 முதல் 12 லட்சம் செலவாகும், ஆனால் கவலைப்பட வேண்டாம், இப்போது Rotary club of Bombay Worli, Dist 3141 இன் உதவியுடன், இந்த அறுவை சிகிச்சை மும்பை SRCC மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படுகிறது. தயவுசெய்து மற்ற குழுக்களில் பதிவிடவும், இதனால் செய்தி தேவைப்படுபவர்களுக்கு சென்றடையும்”
என்று குறிப்பிட்டு வாட்ஸ்ஆப் தகவல் ஒன்று பரவி வருகின்றது. இத்தகவலை வாசகர் ஒருவர் இத்தகவலை நியூஸ்செக்கர் ஹெல்ப்லைன் எண்ணுக்கு (9999499044) அனுப்பி இதுக்குறித்த உண்மையை கேட்டிருந்தார்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: குஜராத்தின் இரண்டு வழிச்சாலை என பரவும் பல்கேரியா நாட்டின் சாலை!
Fact Check/Verification
காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் இலவச அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக வைரலாகும் தகவலில் குறிப்பிட்டுள்ள பாம்பே வொர்லி ரோட்டரி சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தேடுகையில் இதுபோன்ற எந்த ஒரு சேவையும் தருவதாக அதில் குறிப்பிட்டிருக்கவில்லை.

இதனையடுத்து வைரலாகும் தகவலில் குறிப்பிட்டுள்ள பெருந்துறை சதாசிவம் என்பரை தொடர்புக் கொண்டு இத்தகவல் குறித்து விசாரித்தோம். அவர் இத்தகவல் கடந்த இரண்டு வருடங்களாகவே பரவி வருகின்றது. இத்தகவல் முற்றிலும் பொய்யானது என்று தெரிவித்தார்.
Also Read: நோட்டாவை விட பாஜக விரைவில் தமிழகத்தில் அதிக ஓட்டு வாங்கும் என்று கூறினாரா பிரசாந்த் கிஷோர்?
Conclusion
காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் இலவச அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக வாட்ஸ்ஆப்பில் பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Phone Conversation with Sadhasivam, Rotary Club
Rotary Club of Bombay Worli Website
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)