Fact Check
பிக்பாஸ் ஜூலிக்குத் திருமணமா?
பிக்பாஸ் ஜூலிக்கு தொழிலதிபர் ஒருவருடன் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகச் செய்திகள் பரவி வருகிறது.
Fact Check/Verification
தமிழக வரலாற்றில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு எப்போதும் தனி இடம் உண்டு.
தமிழ் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக விளங்கும் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கக் கோரி பீட்டா எனும் அமைப்பு உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்க, உச்சநீதிமன்றமும் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தது.
இதை எதிர்த்து ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் களம் இறங்கினர். முதலில் மெரீனாவில் தொடங்கியப் போராட்டம், சிறிது சிறிதாகத் தமிழகம் முழுவதும் பரவியது.
தமிழ் மொழியின் கலாச்சாரத்தைக் காக்க ஆண், பெண் வித்தியாசமில்லாமல் ஒட்டுமொத்த இளைஞர் பட்டாளமும் களத்தில் இறங்கி, ஜல்லிக்கட்டை தமிழகத்துக்கு மீட்டுத் தந்தனர். எந்தக் காட்சி சார்பும் இல்லாமல் நடைப்பெற்ற இப்புரட்சியானது ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.
இப்புரட்சியில் பலரின் கவனத்தையும் தன்பால் திரும்பச் செய்தவர் ஜூலி. இப்புரட்சியில் அவர் எழுப்பிய கோஷங்கள் மூலம், அவர் ‘வீரத் தமிழச்சி’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். அத்துடன் பிக்பாஸ் சீசன் ஒன்றிலும் அவருக்கு இடம் கிடைத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சி அவரை மேலும் பிரபலமாக்கியது. இதன்பின் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தொகுப்பாளராக இருந்த இவர், தற்போது சிலத் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இப்போது இவருக்கும் தொழில் அதிபர் ஒருவருக்கும் திருமணம் என்று ஊடகங்கள் பலவற்றுள் செய்தி வந்தது. இச்செய்தி தமிழ்2டே நியூஸ், நீயூஸ்டிஎம், தமிழ்.ஏசியாநெட் நியூஸ் ஆகிய இணையத் தளங்களில் வெளிவந்துள்ளது.
இச்செய்திக் குறித்து நியூஸ்செக்கர் சார்பில் ஆராய்ந்தோம்.
உண்மை என்ன?
ஜூலி இச்செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ளார்.
“நான் தற்போது திருமணம் செய்யப்போவதில்லை. நான் திருமண தீமில் எடுத்த ஃபோட்டோ ஷூட்டை வைத்து இது போன்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. இது முற்றிலும் வதந்தியேத் தவிர, உண்மையில்லை.”
என்று ஜூலித் தெரிவித்துள்ளார்.
Conclusion
நம் விரிவான விசாரணைக்குப் பின் ஜூலித் திருமணம் குறித்து வெளிவந்தச் செய்திகள் முற்றிலும் தவறானது என்று தெளிவாகிறது.
Result: False
Our Source
Tamil2daynews: https://tamil2daynews.com/biggboss-julie-gets-marry-a-business-man/
Tamil.asianetnews: https://tamil.asianetnews.com/gallery/cinema/bigg-boss-fame-julie-soon-to-get-married-a-business-man-qe2qgr#image1
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல்முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)



