Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
தமிழக சட்டமன்றத்தின் பரப்பளவு 12 ஆயிரம் சதுர மீட்டர் என்றும், அதன் கட்டுமானச் செலவு 465 கோடி என்றும் கூறி பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட கடந்த வியாழன்(09/12/2020) அன்று பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
இப்போதைய நாடாளுமன்றம், அரசு அலுவலக கட்டிடங்களில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால் நாடாளுமன்ற கட்டிடத்தை கட்ட மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவே வியாழன் அன்று நடைப்பெற்றது.
இந்நிலையில் இந்நிகழ்வு குறித்து பலர் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
இதில் எதிர்மறை கருத்துகளுக்கு பதில் அளிக்கும் வகையில்,
“2020-இல் சுமார் 65 ஆயிரம் சதுர மீட்டரில் நவீன கட்டிட கலையுடன் 4 மாடி கட்டிடமாக கட்டபடும் புதிய நாடாளமன்ற கட்டடத்தின் கட்டுமானச் செலவே 970 கோடிதான், ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பு, 12 ஆயிரம் சதுர மீட்டரில் கட்டப்பட்ட 2 மாடி தமிழக புதிய சட்டசபை கட்டடத்தின் கட்டுமானச் செலவு 465 கோடி ஆகியுள்ளது.
இதன்மூலம் கருணாநிதி அவர்கள் எப்பேர்பட்ட ஊழல்வாதி என்று அறிந்துக்கொள்ளுங்கள்.”
என்று ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுவதுபோல், தமிழக சட்டமன்ற கட்டிடத்தின் மொத்தப் பரப்பளவு 12 ஆயிரம் சதுர மீட்டர்தானா? அதற்காக ஆன செலவு 465 கோடி தானா? என்பதை அறிய, இதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இக்கூற்றின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து தீவிரமாக தேடினோம்.
அவ்வாறு தேடியதில், தமிழக அரசின் அதிகாரப் பூர்வ இணையத்தளத்தில், தமிழக சட்டமன்றத்தின் கட்டுமானப் பணி குறித்த அறிக்கை ஒன்றைக் காண முடிந்தது.

இந்த அறிக்கையின்படி பார்க்கையில், தமிழக சட்டமன்றமானது மொத்தமாக பிளாக் ஏ (Block A), பிளாக் பி (Block B) என இரு கட்டிடங்களை உள்ளடக்கியது.
அதில் பிளாக் ஏ கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 9,30,297 சதுர அடி, அதாவது 2,83,554.5 சதுர மீட்டர். இதன் கட்டுமானப் பணிக்காக நிர்ணயிக்கப்பட்டத் தொகை ரூ. 425.57 கோடி.
அதேபோல் பிளாக் பி கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 7,43,900 சதுர அடி, அதாவது 2,26,740.72 சதுர மீட்டர். இதன் கட்டுமானப் பணிக்காக நிர்ணயிக்கப்பட்டத் தொகை ரூ. 279.564 கோடி.
இந்த கணக்கின்படி பார்த்தால் சட்டமன்ற கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 5,10,295.22 சதுர மீட்டர், அதற்கான செலவு 705.134 கோடியாகும்.
இதன்மூலம் நமக்கு தெளிவாகுவது என்னவென்றால், தமிழக சட்டமன்றத்தின் பரப்பளவு 12 ஆயிரம் சதுர மீட்டர் என்றும், அதன் கட்டுமானச் செலவு 465 கோடி என்றும் சமூகவலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.
சமூக வலைத்தளங்களில் தமிழக சட்டமன்றத்தின் பரப்பளவு குறித்தும், அதன் கட்டுமானச் செலவுக் குறித்தும் பரப்பப்பட்ட தகவல் தவறானது என்பதை ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Facebook Profile: https://www.facebook.com/permalink.php?story_fbid=176610327524469&id=100055265077615
Twitter Profile: https://twitter.com/YeskayOfficial/status/1337047449630875650
Twitter Profile: https://twitter.com/BS_Prasad/status/1337073924119523331
Tamilnadu Government: https://cms.tn.gov.in/sites/default/files/documents/pwd_buildings_0_0.pdf
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
July 2, 2024
Ramkumar Kaliamurthy
July 1, 2024
Ramkumar Kaliamurthy
June 29, 2024