Fact Check
யோகி ஆதித்யநாத் குறித்து திருமா கூறியது உண்மையா?
உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து திருமாவளவன் அவர்கள் குற்றச்சாட்டு ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் அவர்கள் மனுஸ்மிரிதி குறித்து யூடியூப் தொலைக்காட்சி ஒன்றில் பேசி இருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதுக்குறித்துத் தெளிவாக ஆராய்ந்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
அக்கட்டுரையைப் படிக்க: https://tamil.newschecker.in/fact-checks/did-thirumavalavan-speak-disparagingly-of-women/
இதன்பின் திருமாவளவன் அவர்களுக்கு எதிராக பலக் கண்டனங்களும், எதிர்ப்புகளும் கிளம்பியது. இதன் காரணமாக இவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் திருமாவளவன் அவர்கள் இப்பிரச்சனைத் தொடர்பாகப் பேச சமீபத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பின்போது ஹத்ராஸ் சம்பவத்தின்போது யோகி ஆதித்யநாத் அவர்கள்,
” தாகூர் சாதியினர் இவ்வாறுதான் இருப்பார்கள். மற்றவர்கள் அதற்கேற்றவாறு அனுசரித்துப் போக வேண்டும் “
என்று கூறியதாக திருமாவளவன் அவர்கள் தெரிவித்தார்.
அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு வீடியோ உங்கள் பார்வைக்காக:
திருமாவளவன் அவர்கள் கூறியதுபோல், யோகி ஆதித்யநாத் பேசினாரா என்பதை அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய முடிவெடுத்தோம்.
Fact Check/Verification
யோகி ஆதித்யாநாத் தாகூர் மக்கள் குறித்து இவ்வாறு பேசினாரா என்பதை அறிய, இதுக்குறித்துத் தேடினோம்.
அவ்வாறு தேடியதில் Factly, Viswasnews உள்ளிட்ட பல உண்மை அறியும் இணையத்தளங்கள் இதேக் கூற்றை ஆராய்ந்து அதை பொய் என்று நிருபீத்திருந்ததைக் காண முடிந்தது.
ஹத்ராஸ் சம்பவம் நடைப்பெற்றபோது, உத்திரப் பிரதேச முதல்வர் யோகிநாத் குறித்து பல வதந்திகள் உலவி வந்தது. அவற்றுள் தாகூர் மக்கள் குறித்து யோகி அவர்கள் பேசியதாக வந்த இந்தத் தகவலும் ஒன்றாகும்.
இதேபோல் பாஜகவைச் சார்ந்த CTR நிர்மல்குமார் என்பவர் இக்கூற்றை முலாயம் சிங் யாதவ் கூறியதாகவும், அதை யோகி ஆதித்யாநாத் கூறியதாக திருமாவளவன் திரித்துப் பேசியதாகவும் கூறி வீடியோ ஒன்றைத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதையும் நம் தேடலில் காண முடிந்தது.
Conclusion
நம் விரிவான ஆய்வுக்குப்பின் நமக்குத் தெளிவாகுவது என்னவென்றால், திருமாவளவன் அவர்கள் ஆதித்ய யோகிநாத் குறித்துக் கூறியக் கருத்து முற்றிலும் தவறானது. இதற்கான ஆதாரங்களையும் நாங்கள் இக்கட்டுரையில் தந்துள்ளோம்.
Result: False
Our Sources
Red Pix 24×7: https://www.youtube.com/watch?v=ZYnAjw9wfEs
CTR Nirmalkumar: https://twitter.com/CTR_Nirmalkumar/status/1322948498858205189
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)