Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று ராமநாதபுரம் கல்குள மக்கள் தீர்மானம்
Fact: வைரலாகும் நியூஸ்கார்டு போலியானதாகும்; புதிய தலைமுறை தரப்பு இதை தெளிவு செய்துள்ளது.
“நாகர்கோயிலுள்ள கல்குளம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று தேசியக்கொடி மீது சத்தியம் செய்து உறுதிமொழி எடுத்துள்ளனர். பாஜகவிற்கும் அதன் கூட்டணி கட்சிக்கும் வாக்களிக்க மாட்டோம் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அண்ணாமலை காமராசர் சிலையை வணங்கியதாக பரவும் எடிட் படம்!
பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று ராமநாதபுரம் கல்குள மக்கள் தீர்மானம் எடுத்ததாக வைரலாகும் நியூஸ்கார்டில் காணப்படும் எழுத்துப்பிழை, ஒரே வார்த்தைக்கு நடுவில் இருக்கும் இடைவெளி போன்றவற்றை காணும்போதே அது போலியான நியூஸ்கார்டு என்பதை அறிய முடிகின்றது.

இருப்பினும் பலர் இந்த நியூஸ்கார்டை உண்மை என்று நம்பி பகிர்ந்து வருவதால் இதுக்குறித்து முழுமையாக ஆய்வு செய்து விளக்க விரும்பினோம்.
வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இதில் வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள ஆகஸ்ட் 16, மதியம் 1 மணிக்கு தமிழிசைக்கு எதிராக முழக்கமிட்ட சோபியா மீதாக வழக்கு ரத்து, ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை, நாடோடி பழங்குடியினத்தைச் சேர்ந்த அஸ்வினி கைது ஆகிய மூன்று செய்திகள் குறித்தே புதிய தலைமுறை நியூஸ்கார்டுகளை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
இதுத்தவிர்த்து வேறு எந்த ஒரு நியூஸ்கார்டையும் அந்நிறுவனம் வெளியிட்டிருக்கவில்லை.
இதனையடுத்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை புதிய தலைமுறைவெளியிடவில்லை என்று பதிலளித்தார்.
Also Read: சாதி பார்ப்பதில்லை என கூறியவரிடம் பழங்குடியினப் பெண் கேட்ட கேள்வி என்று பரவும் புனைவு வீடியோ!
பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று ராமநாதபுரம் கல்குள மக்கள் தீர்மானம் எடுத்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Phone Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai
Self Analysis
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 20, 2024
Vijayalakshmi Balasubramaniyan
June 14, 2024
Ramkumar Kaliamurthy
June 13, 2024