Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் தமிழ்பேச்சு என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்ற பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நிலையில் உள்ளது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி பேச்சுப் போட்டியில் கலந்துக் கொண்ட வீடியோ என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



Also Read: காவிரி ஆற்றங்கரையில் கடற்கன்னி காணப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் தமிழ்பேச்சு என்று கூறி வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். நம் ஆய்வில் வைரலாகும் வீடியோவில் இருக்கும் மாணவி கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உயிரிழந்த மாணவி கிடையாது என்பதை அறிய முடிந்தது.
வைரலாகும் வீடியோவில் இருக்கும் சிறுமி கோவை கௌமார மடாலயப் பள்ளியைச் சார்ந்த மாணவியாவார். இப்பள்ளியின் யூடியூப் பக்கத்தில் எனது மொழியின் தொன்மையும் பெருமையும் தற்போதைய நிலையும் | உலகத் தாய்மொழி தின திருவிழா என்கிற தலைப்பில் வைரலாகும் வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.
இதனைத் தொடர்ந்து, வைராலாகும் வீடியோவில் காணப்படும் மாணவியின் உறவினரான ரமேஷ் என்பவரை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் தொடர்புக் கொண்டு விசாரித்ததில், வீடியோவில் இருக்கும் சிறுமி என் அக்கா மகள்தான். அவரை தவறாக கள்ளக்குறிச்சி மாணவி என்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்” என்று பதிலளித்தார்.
Also Read: 1400 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னன் கட்டிய கோயிலில் கணிணி சிற்பம் உள்ளதா?
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் தமிழ்பேச்சு என்று கூறி வைரலாகும் வீடியோவில் காணப்படும் மாணவி உண்மையில் கள்ளக்குறிச்சி மாணவி அல்ல என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
Sources
Goumara Madaalayam’s Youtube Video, Pubished on 03/03/2020
Phone Conversation with Ramesh, on 04/08/2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 30, 2023
Ramkumar Kaliamurthy
November 6, 2023
Ramkumar Kaliamurthy
February 28, 2023