Fact Check
அரசு பேருந்தில் மதுவுக்கு விளம்பரம் செய்யப்படுகின்றதா?
Claim: அரசு பேருந்தில் மதுவுக்கு விளம்பரம்
Fact: வைரலாகும் படத்திலிருப்பது சர்க்கரை விளம்பரமாகும்.
அரசு பேருந்தில் மதுவுக்கு விளம்பரம் செய்யப்படுவதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பாப்கார்னில் சிறுநீர் கலந்து விற்பனை செய்த முஸ்லீம் இளைஞர் என்று பரவும் பொய் தகவல்!
Fact Check/Verification
அரசு பேருந்தில் மதுவுக்கு விளம்பரம் செய்யப்படுவதாக கூறி புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து, அப்படத்தை பெரிதுப்படுத்தி விளம்பரத்தை பார்த்தோம். அதில் ‘SNJ 10000 Granulated Sugar’ என்று இருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து ‘SNJ 10000 Granulated Sugar’ என்ற கீ வார்த்தையை பயன்படுத்தி தேடியதில் அப்பெயரில் சர்க்கரை ஒன்று விற்பனையாவதை அறிய முடிந்தது.

தொடர்ந்து இச்சக்கரை தயாரிக்கப்படும் SNJ நிறுவனம் குறித்து தேடுகையில், இந்நிறுவனம் சர்க்கரை தவிர்த்து ஹோட்டல் மற்றும் மதுபானம் தயாரிக்கும் தொழிலையும் செய்து வருவதை அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் வாயிலாக அறிய முடிந்தது.

மேலும் SNJ 10000 எனும் அதே பெயரில் மதுவகை ஒன்றை இந்நிறுவனம் விற்பனை செய்து வருவதையும் அறிய முடிந்தது.

இதன் அடிப்படையில் பார்க்கையில் SNJ நிறுவனத்தின் சர்க்கரை விளம்பரத்தை, அந்நிறுவனத்தின் மதுபான விளம்பரம் என்று தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டு மேற்காணும் தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது என்பது தெளிவாகின்றது.
Also Read: டெல்லி அரசு பள்ளியில் பாரத மாதாவின் கிரீடத்தை கழற்றிவிட்டு மாணவர்களுக்கு நமாஸ் கற்பிக்கப்படுகிறதா?
Conclusion
அரசு பேருந்தில் மதுவுக்கு விளம்பரம் செய்யப்படுவதாக பரவும் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
SNJ Official Website
Flipkart Website
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)