Fact Check
ரஷ்யா கனடா ஆர்ட்டிக் பிரதேசத்தில் பூமிக்கு மிக அருகில் மிக வேகமாக கடக்கும் சந்திரன்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?
ரஷ்யா கனடா ஆர்ட்டிக் பிரதேசத்தில் பூமிக்கு மிக அருகில் மிக வேகமாக சந்திரன் கடந்ததாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Archive Link: https://archive.ph/usLmi
சமூக வலைத்தளங்களில் விண்வெளி குறித்த பொய் செய்திகள் வைரலாகுவது அடிக்கடி நிகழ்ந்து வருகின்றது. சமீபத்தில் கூட சீன ராக்கெட் ஒன்று செயலிழந்து தென்காசியில் விழுந்தததாக பொய் செய்தி ஒன்று பரவியது. இதை நியூஸ்செக்கர் சார்பில் விசாரித்து செய்தி வெளியிட்டிருந்தோம்.
அச்செய்தியை படிக்க: https://beta.newschecker.mobiux.xyz/ta/fact-checks-ta/chinese-rocket-didnt-falls-on-tn
இப்போது இந்த வரிசையில் ரஷ்யா கனடா ஆர்ட்டிக் பிரதேசத்தில் பூமிக்கு மிக அருகில் மிக வேகமாக சந்திரன் கடந்து சென்றதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Archive Link: https://archive.ph/aT5mZ

Archive Link: https://archive.ph/qQJBK

Archive Link: https://archive.ph/33Jxv
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
ரஷ்யா கனடா ஆர்ட்டிக் பிரதேசத்தில் பூமிக்கு மிக அருகில் மிக வேகமாக சந்திரன் கடந்து சென்றதாக கூறி வீடியோ ஒன்று வைராலனதைத் தொடர்ந்து, வைரலாகும் தகவல் உண்மைதானா என்பது குறித்து ஆய்வு செய்தோம். அதில் இத்தகவல் முற்றிலும் தவறானது என்பதை நம்மால் அறிய முடிந்தது.
உண்மையில் பூமிக்கு அருகில் சந்திரன் கடந்து செல்லுமாறு உள்ள வீடியோ கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டதாகும். இவ்வீடியோவை அலெக்ஸே என்பவர் உருவாக்கியுள்ளார். இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இவ்வீடியோவை மற்றொரு நிறுவனத்திற்கு விற்றுவிட்டதாக பதிவிட்டுள்ளார்.
Conclusion
சமூக வலைத்தளங்களில் ரஷ்யா கனடா ஆர்ட்டிக் பிரதேசத்தில் பூமிக்கு மிக அருகில் மிக வேகமாக சந்திரன் கடந்ததாக கூறி வைரானத் தகவல் முற்றிலும் தவறானது என்பதையும், உண்மையில் அவ்வீடியோ கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டதென்பதையும் உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated News
Our Sources
Aleksey N: https://twitter.com/AlekseyN11/status/1398970648698003461
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)