Fact Check
உலகத் தலைவர்களின் அலங்கார மதிப்பீட்டில் பிரதமர் மோடி முதலிடம் என்கிற செய்தி உண்மையா?
உலகத் தலைவர்களின் ஆடை அலங்கார மதிப்பீடு குறித்து, அதிகம் செலவு செய்வது யார் என்று மார்னிங் கன்சல்ட் நடத்திய கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடி முதலிடம் என்பதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

மார்னிங் கன்சல்ட் ஒரு அமெரிக்க கருத்துக்கணிப்பு நிறுவனமாகும். இந்நிறுவனம், சமீபத்தில் ஒவ்வொரு உலகத் தலைவர்களுக்கும் அவர்களது நாட்டளவில் எந்தளவிற்கு மதிப்பு இருக்கிறது என்பதை தரவரிசை மதிப்பீட்டுக்கு உள்ளாக்கி அதன் தரவுகளை வெளியிட்டு வருகின்றது. இந்த ஆய்வில் கடந்த சில மாதங்களாக பிரதமர் மோடி முதலிடத்தில் தொடர்ந்து இருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில், “மார்னிங் கன்சல்ட் நடத்திய கருத்துக்கணிப்பில் உடை மற்றும் அலங்காரத்திற்காக அதிக செலவு செய்யும் உலகத் தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம்” என்கிற செய்தியுடன் நியூஸ் கார்டு ஒன்று வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification:
உலகத் தலைவர்களின் அலங்கார மதிப்பீட்டில் பிரதமர் மோடி முதலிடம் என்பதாகப் பரவும் நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய வைரலாகும் நியூஸ் கார்டின் தலைப்பிலிருக்கும் கதிர் நியூஸின் அதிகாரப்பூர்வ பக்கத்தை முதலில் ஆராய்ந்தோம்.
அதில், குறிப்பிட்ட அந்த வைரல் நியூஸ் கார்டு போலி என்பதை அவர்கள் அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், உண்மையில் மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வின் விவரம் குறித்து ஆராய்ந்தபோது பிரதமர் மோடி உலகத் தலைவர்களின் அங்கீகார மதிப்பீட்டில் முதலிடத்தில் இருக்கிறார் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

இது பல்வேறு முன்னணி செய்தி நிறுவனங்களில் செய்தியாகவும் வெளியாகியுள்ளது.
Conclusion:
உலகத் தலைவர்களின் அலங்கார மதிப்பீட்டில் பிரதமர் மோடி முதலிடம் என்பதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)