Fact Check
இஸ்லாமிய எம்.எல்.ஏ போலீசாரை தாக்கியதாக பரவும் தவறான வீடியோத் தகவல்!
Claim: இஸ்லாமிய எம்.எல்.ஏ போலீசாரை தாக்கியதாக பரவும் வீடியோத் தகவல்!
Fact: வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு 2018ல் நடந்த பழைய சம்பவமாகும். அவ்வீடியோவில் காணப்படுபவர் இஸ்லாமியர் அல்ல; இந்து மதத்தவர் ஆவார். அவர் பெயர் மணீஷ் சௌத்ரி என்பதாகும். இவர் பாஜகவின் கவுன்சிலராக இருந்தவராவார்.
“எம்.எல்.ஏ மன்சூர் முகமது திமிரைப் பாருங்கள். போலீஸின் நிலைமையே இப்படி இருக்கும் போது, பொதுமக்களின் கதி என்னவாகும்” என்று குறிப்பிட்டு வீடியோஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

