Fact Check
ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி ஒன்றிய அரசை விமர்சித்தாரா?
Claim: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி ஒன்றிய அரசை விமர்சித்ததாக பரவும் வீடியோ.
Fact: நிதின் கட்கரி பேசியதில் ஒரு குறிப்பிட்டபகுதியை மட்டும் வைத்து இந்த தவறான தகவல் பரப்பப்படுகின்றது.
“இன்று கிராமங்கள், ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியற்றவர்களாக உள்ளனர். கிராமங்களில் நல்ல சாலைகள் இல்லை, குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர் இல்லை, நல்ல மருத்துவமனைகள் இல்லை, நல்ல பள்ளிகள் இல்லை” என்று பாஜக தலைமையிலான ஒன்றிய அரசை ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி விமர்சித்ததாக கூறி தமிழ்நாடு காங்கிரஸ் அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவை பலரும் அவர்கள்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

