Fact Check
புஸ்ஸி ஆனந்த் காலில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் விழுவதாக பரவும் 2022ஆம் ஆண்டு புகைப்படம்!
Claim: புஸ்ஸி ஆனந்த் காலில் விழும் நிர்வாகிகள்!ஆண்டவா திரும்பவும் முதல்ல இருந்தா
Fact: வைரலாகும் புகைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
புஸ்ஸி ஆனந்த் காலில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் விழுவதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
”புஸ்ஸி ஆனந்த் காலில் விழும் நிர்வாகிகள்!ஆண்டவா திரும்பவும் முதல்ல இருந்தா” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மோடி மீண்டும் ஆட்சி அமைத்தால் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாகும் என்றாரா நிர்மலா சீதாராமன்?
Fact Check/Verification
புஸ்ஸி ஆனந்த் காலில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் விழுவதாக பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அது கடந்த 2022 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது நமக்கு உறுதியானது.
கடந்த 2022ஆம் ஆண்டு பனையூரில் விஜய் தனது விஜய் மக்கள் நிர்வாக இயக்குநர்களை சந்தித்து பேசியிருந்தார். அப்போது, புஸ்ஸி ஆனந்த் காலில் விஜய் ரசிகர்கள் விழுந்ததாகவும், அதுகுறித்து விஜய் புஸ்ஸி ஆனந்தை கடிந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


இதன் பின்னணி முழுமையாக தெரியாவிட்டாலும் கூட குறிப்பிட்ட புகைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டே எடுக்கப்பட்டது; தற்போது விஜயின் புதிய கட்சியான தமிழக வெற்றி கழகம் தொடங்கப்பட்ட பின்பு எடுக்கப்பட்டது அல்ல என்பது உறுதியாகிறது.
Also Read: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்றாரா பிரசாந்த் கிஷோர்?
Conclusion
புஸ்ஸி ஆனந்த் காலில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் விழுவதாக பரவும் புகைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
Report from FilmiBeat, Dated November 22, 2022
Report from AsiaNet tamil, Dated November 22, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)