Fact Check
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களைத் தாக்கிய RCB ரசிகர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Claim: விராட் கோலி விதைத்த விதை..மட்டமான RCB ரசிகர்கள்
Fact: வைரலாகும் வீடியோ கடந்த 2018ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களைத் தாக்கிய RCB அணி ரசிகர்கள் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”விராட் கோலி விதைத்த விதை..மட்டமான RCB ரசிகர்கள்” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இறந்த மனைவி உடலை சுமந்து சென்ற நபர் என்று பரவும் 2016ஆம் ஆண்டு வீடியோ!
Fact Check/Verification
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களைத் தாக்கிய RCB ரசிகர்கள் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அந்த வீடியோ கடந்த 2018ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதை நம்மால் அறிய முடிந்தது. SportsTak என்கிற யூடியூப் பக்கத்தில் தற்போது வைரலாகும் அதே வீடியோ கடந்த 2018ஆம் ஆண்டு பகிரப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 11, 2018 அன்று “Protesters attacked CSK fans outside the Chepauk Stadium in Chennai” என்று புதியதலைமுறை செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத ஒன்றிய அரசினைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட போரட்டக்குழுவினர் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் உள்ளிட்ட கிரிக்கெட் ரசிகர்களை அடித்து உதைத்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
உச்ச நீதிமன்ற அறிவிப்பிற்கு பின்பும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து பல்வேறு கட்சியினரும் போராட்டம் அறிவித்த நிலையில் ஐபிஎல் போட்டிகளால் இந்த போராட்டம் நீர்த்து போய்விடும் என்பதாக நாம் தமிழர், முக்குலத்தோர் புலிப்படை, தமிழக வாழ்வுரிமைக்கட்சி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டபோது சிஎஸ்கே ரசிகர்களை சிலர் தாக்கியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வீடியோவில் இடம்பெற்றுள்ள ஹரி சரவணன் என்கிற அந்த சிஎஸ்கே ரசிகர், தன்னை நாம் தமிழர் கட்சியினர் தாக்கியதாக செய்திகளில் பேட்டியளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read: கண்ணூர் விமான நிலையத்தில் பவர்பேங்க் வெடித்ததா?
Conclusion
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களைத் தாக்கிய RCB ரசிகர்கள் என்று பரவும் வீடியோ கடந்த 2018ஆம் ஆண்டைச் சேர்ந்த வீடியோ என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
YouTube Video From, Puthiyathalaimurai, Dated April 11, 2018
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)