Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: ஜார்ஜ் சோரஸூடன் நெருக்கமாக இருக்கும் ராகுல் காந்தி
Fact: வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
ராகுல் காந்தி தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸூடன் இருப்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
”பப்பு சோரோஸ்” என்கிற தலைப்புடன் இப்புகைப்படம் பரவி வருகிறது. Johny Bhai என்கிற ட்விட்டர் பயனாளர் இப்புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மாமன்னன் படக்குழுவினர் மீது அவதூறு வழக்கு தொடுப்பேன் என்றாரா ஈ.பி.எஸ்?
ராகுல் காந்தி தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸூடன் இருப்பதாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது ஜார்ஜ் சோரஸின் மகனான அலெக்ஸாண்டர் சோரஸ் $25 பில்லியன் மதிப்புள்ள அறக்கட்டளைக்கு பொறுப்பாளராக நியமித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் அவர் தனது தந்தை ஜார்ச் சோரஸூடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. NYTimes, Washington post, உள்ளிட்ட பிரபல ஊடகங்களில் இப்புகைப்படம் வெளியாகியுள்ளது.

அலெக்ஸாண்டர் சோரஸின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்திலும் இப்புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
ஜார்ஜ் சோரஸ், தனது மகன் அலெக்ஸாண்டர் சோரஸூடன் இருக்கும் இப்புகைப்படத்தை எடுத்தே அதில் ராகுல் காந்தியின் முகத்தை எடிட் செய்து பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகியது. முன்னதாக சமீபத்தில் அமெரிக்கா சென்ற ராகுல் காந்தி இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க முயற்சிக்கும் ஜார்ஜ் சோரஸூடன் கைகோர்த்துள்ளதாக பாஜக மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியின் குற்றச்சாட்டு பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read: முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு இருக்கை தராமல் அவமதிமதித்தாரா எடப்பாடி பழனிசாமி?
ராகுல் காந்தி தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸூடன் இருப்பதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report From, Washington Post, Dated June 12, 2023
Instagram Post From, Alexander Soros, Dated February 16, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)Vijayalakshmi Balasubramaniyan
June 14, 2024
Kushel HM
June 3, 2024
Vijayalakshmi Balasubramaniyan
May 21, 2024