Fact Check
நடிகர் அக்ஷய் குமார் முன் அடங்கி உட்கார்ந்திருந்தாரா பிரதமர் மோடி?
Claim: நடிகர் அக்ஷய் குமார் முன் அடங்கி உட்கார்ந்திருந்தார் பிரதமர் மோடி
Fact: இது தவறானத் தகவலாகும். அக்ஷய் குமார் பிரதமர் மோடியிடம் உரையாடுகையில் எவ்வாறு ஓய்வெடுப்பீர்கள் என்று கேள்வி கேட்கையில் கொடுத்த உடல் மொழியை வைத்து இத்தகவல் பரப்பப்படுகின்றது.
“ரெண்டு பேரோட உடல் மொழியையும் பாருங்க.. ஒரு நடிகர் முன்னாடி அடக்கமா ஒக்காந்துனு இருக்கும் இவர பாத்துதான் ஐநாவே அரண்டு போய் கெடக்காம்..” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கேரள லுலு மாலில் இந்திய தேசியக் கொடியை விட பாகிஸ்தான் கொடி பெரியதாக வைக்கப்பட்டதா?
Fact Check/Verification
நடிகர் அக்ஷய் குமார் முன் பிரதமர் மோடி அடங்கி உட்கார்ந்திருந்ததாக கூறி புகைப்படம் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். அந்த ஆய்வில் வைரலாகும் இத்தகவல் தவறான புரிதலில் பரப்பப்பட்டு வருகின்றது என அறிய முடிந்தது.
நம் தேடலில் பிரதமர் மோடி பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருடன் உரையாடிய வீடியோ ஒன்று பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ஏப்ரல் 24, 2019 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது. இந்த உரையாடலின்போது, “நீங்கள் எப்போதாவது தோட்டத்தில் அமைதியாக உட்கார்ந்திருக்கிறீர்களா? யோசித்திருக்கிறீர்களா? அல்லது இதுபோன்று வேறு ஏதாவது ஓய்வெடுக்க செய்துள்ளீர்களா?” என்று அகஷய் குமார் (01:02:44 மணிநேரத்தில்) பிரதமரை கேள்வி கேட்டார்.
இக்கேள்வியின்போது அக்ஷய்குமார் ஒரு உடல்மொழியை பயன்படுத்தினார். பிரதமர் எப்போதும் போல இயல்பாக அமர்ந்திருந்தார். இத்தருணத்தின் படத்தை வைத்தே அக்ஷய் குமார் முன் பிரதமர் அடங்கி உட்கார்ந்திருந்ததாக திரித்து பரப்பப்பட்டு வருகின்றது.
மொத்தம் ஒரு மணிநேரம் ஒன்பது நிமிடம் இருக்கும் இந்த வீடியோவில் இருவரும் பரஸ்பர மரியாதையுடன் பேசுவதை காண முடிந்தது. எந்த ஒரு இடத்திலும் ஒருவரை மற்றொருவர் அவமரியாதையாக நடத்தவே இல்லை.
Also Read: கத்தாரில் காரை நசுக்கும் ஆக்டோபஸ் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Conclusion
நடிகர் அக்ஷய் குமார் முன் பிரதமர் மோடி அடங்கி உட்கார்ந்திருந்ததாக பரவும் தகவலானது தவறான புரிதலில் பரப்பப்பட்டு வருகின்றது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
YouTube Video from BJP, Dated April 24, 2019
Self Analysis
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)