Fact Check
அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத் துறையை பிரதமர் மோடிக்கு ஒதுக்கியதை கிண்டலடித்து செய்தி வெளிட்டதா சன் நியூஸ்?
அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத் துறை பிரதமர் மோடிக்கு ஒதுக்கப்பட்டதை கிண்டலடித்து சன் நியூஸ் செய்தி வெளியிட்டதாக, நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த புதனன்று புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 15 கேபினட் அமைச்சர்களும் 28 இணை அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்டார்கள்.
புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு புதிதாக பல பொறுப்புகள் தரப்பட்டன. இதில் அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத் துறையை கவனிக்கும் பொறுப்பு பிரதமர் மோடிக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த நிகழ்வை கிண்டலடிக்கும் தோரணையில் சன் நியூஸ் செய்தி வெளியிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.


சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
பிரதமர் மோடிக்கு அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத் துறை ஒதுக்கப்பட்டதை சன் நியூஸ் கிண்டலடித்து செய்தி வெளியிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, இதன் உண்மைத்தன்மை குறித்து தேடினோம்.
முன்னதாக, இந்த நியூஸ்கார்டை உண்மையாகவே சன் நியூஸ் வெளியிட்டதா என்பதை அறிய, சன் நியூஸின் சமூக வலைத்தளப் பக்கங்களில் இதுக்குறித்து தேடினோம்.
நம் தேடலில் பிரதமருக்கு அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத் துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டிருந்தது குறித்த செய்தி, சன் நியூஸ் பக்கங்களில் வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. ஆனால் அச்செய்தியில் இணைக்கப்பட்டிருந்த நியூஸ்கார்டானது வைரலாகும் நியூஸ்கார்டிலிருந்து மாறுபட்டிருந்தது.
இதன்பின் சன் நியூஸின் டிஜிட்டல் தலைவரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து கேட்டோம். இதற்கு அவர்,
இந்த நியூஸ்கார்ட் பொய்யானது, இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எழுத்துரு (font), லோகோ போன்றவை சீரற்று உள்ளது. இதை நாங்கள் வெளியிடவில்லை.
என்று விளக்கமளித்தார்.
இதனடிப்படையில் பார்க்கும்போது பிரதமருக்கு அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத் துறை ஒதுக்கப்பட்டதை சன் நியூஸ் கிண்டலடித்து செய்தி வெளியிட்டதாக பரப்பப்படும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியாகின்றது.
Also Read: ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவை திரும்ப பெறாவிட்டால் சினிமாவிலிருந்தே விலகுவேன் என்றாரா சூர்யா?
Conclusion
பிரதமர் மோடிக்கு அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத் துறை ஒதுக்கப்பட்டதை கிண்டலடித்து சன் நியூஸ் செய்தி வெளியிட்டதாக பரப்பப்படும் நியூஸ்கார்ட் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Sun News: https://twitter.com/sunnewstamil/status/1412974967776366602
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)