Fact Check
போலீசார் தர்பூசணி திருடியதாக வைரலாகும் வீடியோ உண்மையானதா?
போலீசார் தர்பூசணி திருடியதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே போலீசார் ஒருவர் சாலையின் ஒரத்தில் நின்றிருந்த தர்பூசணி வண்டியிலிருந்து தர்பூசணி பழத்தை எடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அந்த தர்பூசணி பழத்தை அந்த காவலர் திருடியதாக கூறி பலரும் இவ்வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். ஜெயா பிளஸ், ABP நாடு உள்ளிட்ட ஊடகங்களும் இதை செய்தியாக வெளியிட்டுள்ளன.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தமிழக முதல்வரை அழைத்து வர புல்லட் புரூஃப் காரை அனுப்பினாரா பிரதமர்?
Fact Check/Verification
காவலர்கள் தர்பூசணி திருடியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இதன் பின்னணியில் இருந்த உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இதுக்குறித்து தேடினோம்.
நம் தேடலில் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தகவல் தவறான ஒன்று என்பது நமக்கு தெளிவாகியது. ஒன் இந்தியா தமிழ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்நிகழ்வு குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் காவலர் தர்பூசணிக்கு காசுக் கொடுத்தே எடுத்துச் சென்றுள்ளார். திருடி செல்லவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த தர்பூசணி வண்டியின் உரிமையாளரின் சாட்சியமும் தரப்பட்டுள்ளது.
அவர், அந்த காவலர் தனக்கு நன்கு பழக்கமானவர் என்றும், அவர் பணம் கொடுத்தே தர்பூசணியை வாங்கிச் சென்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சி, தான் இவ்வாறு கூறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நம் மேற்குறிப்பிட்ட நபரை நேரிடையாக தொடர்புக்கொண்டு இந்நிகழ்வு குறித்து விரிவாக விசாரிக்க முயற்சித்து வருகின்றோம். நமக்கு அவரின் தொடர்பு கிடைக்கும்பட்சத்தில், அதுக்குறித்தும் இந்த கட்டுரையில் இணைக்கின்றோம்.
Also Read: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் டயருக்கு அடியில் எலுமிச்சை பழம் வைக்கப்பட்டதா?
Conclusion
போலீசார் தர்பூசணி திருடியதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வைரலான வீடியோ தவறானது என்பதி உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
One India Tamil: https://www.facebook.com/watch/?v=321042749566211&extid=NS-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)