Saturday, June 13, 2026

Fact Check

பூப்புனித நீராட்டு விழா காரணமாக ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை என்றாரா நிதியமைச்சர்?

banner_image

பூப்புனித நீராட்டு விழா காரணமாக ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கொழுந்தியாள் மகள் பூப்புனித நீராட்டு விழா காரணமாக ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை என்று நிதியமைச்சர் கூறியதாக ப்ரவும் நியூஸ்கார்ட்

உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் கடந்த வெள்ளியன்று (17/09/20210 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில நிதி துறை அமைச்சர்கள் இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றனர். ஆனால், தமிழ்நாடு சார்பில் நிதித் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், “எனது கொழுந்தியாள் மகள் பூப்புனித விழாவில் பங்கேற்க இருப்பதால் டெல்லியில் நடைபெறும் ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை” என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக நியூஸ் 7 தமிழின் நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

கொழுந்தியாள் மகள் பூப்புனித நீராட்டு விழா காரணமாக ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை என்று நிதியமைச்சர் கூறியதாக ப்ரவும் நியூஸ்கார்ட் - 1

Facebook Link

கொழுந்தியாள் மகள் பூப்புனித நீராட்டு விழா காரணமாக ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை என்று நிதியமைச்சர் கூறியதாக ப்ரவும் நியூஸ்கார்ட் - 2

Facebook Link

கொழுந்தியாள் மகள் பூப்புனித நீராட்டு விழா காரணமாக ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை என்று நிதியமைச்சர் கூறியதாக ப்ரவும் நியூஸ்கார்ட் - 3

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மெஸ்ஸி விட்டு சென்ற இடம் இன்பநிதிக்கானது என்றாரா ஊடகவியலாளர் செந்தில் வேல்?

Fact Check/Verification

பூப்புனித நீராட்டு விழா காரணமாக ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

இதில் வைரலாகும் நியூஸ்கார்ட் பொய்யான ஒன்று என்பதை நம்மால் அறிய முடிந்தது. நியூஸ் 7 தமிழ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இதை உறுதி செய்திருந்தது.

Archive Link

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களும் வைரலாகும் இத்தகவல் முற்றிலும் தவறானது என்று தனது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்திருந்ததை நம்மால் காண முடிந்தது.

Archive Link

மேலும் மற்றொரு டிவீட்டில்,

“வடிகட்டிய முட்டாள்தனம்!

 கூட்டம் நடந்தது டெல்லியில் இல்லை லக்னோவில்

எனக்கு கொழுந்தியாள் இல்லை, எப்படி இல்லாதவர் மகளுக்கு விழா நடக்கும்?

பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டாமா?”

என்று பிடிஆர் அவர்கள் பதிவு செய்திருந்ததை நம்மால் காண முடிந்தது.

Archive Link

மேற்கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது கொழுந்தியாள் மகள் பூப்புனித நீராட்டு விழா காரணமாக ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது உறுதியாகின்றது.  

Also Read: ஓலா நிறுவனம் தனது இ-ஸ்கூட்டர்களுக்கு சீமான் என்று பெயர் சூட்டப்படும் என அறிவித்ததா?

Conclusion

பூப்புனித நீராட்டு விழா காரணமாக ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நியூஸ்கார்ட் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

News 7 Tamil

PTR Tweets:-


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

14,935

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage