Fact Check
திமுக ஆட்சியில் லஞ்சம் கேட்ட போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பரவும் பழைய வீடியோ!
Claim: திமுக ஆட்சியில் லஞ்சம் கேட்ட போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பரவும் வீடியோ!
Fact: இந்நிகழ்வு 2018 ஆம் ஆண்டில் நடந்ததாகும்; அச்சமயத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது அதிமுகவாகும்.
“எங்க நடந்துச்சு ன்னு தெரியல… #விடியா_திமுகமாடல் அரசு ஆளும் தமிழ்நாடு தான். யாருக்குமே #பாதுகாப்பில்லாத_தமிழ்நாடு” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மாற்றுத்திறனாளிகளுக்கு 40 ஆயிரம் மதிப்புள்ள வீல்சேரை இலவசமாக தருகின்றதா மத்திய அரசு?
Fact Check/Verification
திமுக ஆட்சியில் லஞ்சம் கேட்ட போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறி வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் ‘காசு கேட்ட போலீசை விரட்டிய மக்கள்’ என்று தலைப்பிட்டு மார்ச் 22, 2018 அன்று ‘நியூஸ்கிளிட்ஸ் தமிழ்’ எனும் யூடியூப் பக்கத்தில் இதே வீடியோ பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

சென்னை வேளச்சேரியில் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து காவலர் ஒருவர் லஞ்சம் கேட்டதால், பொதுக்கள் அவரை சூழ்ந்து கேள்வி கேட்டதாக அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தற்போது நடந்ததல்ல 2018 ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது நடந்ததாகும்.
Also Read: ஆஸ்திரேலியாவின் வெற்றி இந்திய கிரிக்கெட் மாபியாவிற்கு எதிரான வெற்றி என்றாரா ரிக்கி பாண்டிங்?
Conclusion
திமுக ஆட்சியில் லஞ்சம் கேட்ட போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வைரலாகும் வீடியோ பழைய வீடியோவாகும். இந்நிகழ்வு 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது நடந்ததாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Partly False
Our Sources
Youtube Video from NewsGlitz Tamil, Dated March 22, 2018
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)