Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தின்போது சபரிமலை போராளி ஒருவரை சந்தித்ததாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சபரிமலையில் சிறுமிகள் மற்றும் முதியவர்களை தவிர்த்து வயதுவந்த மற்ற பெண்கள் செல்லக்கூடாது எனும் மரபு இருந்து வந்தது. இதை எதிர்த்து போராட்டங்கள் நடந்த நிலையில் அனைத்து பெண்களும் கோவிலுக்குள் நுழையலாம் என்று உச்சநீதி மன்றம் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.
இருப்பினும் பெண்கள் சபரிமலையில் நுழைய முற்படும்போது தாக்குதலுக்கு உள்ளாகுவது, போராட்டங்கள் நடைபெறுவது என்பது தொடர்கதையாகவே உள்ளது. இந்நிலையில் இந்திய ஒற்றுமை பயணத்தின்போது ராகுல் காந்தி சபரிமலை போராளி ஒருவரை சந்தித்ததாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் கிரிக்கெட் விளையாடும்போது கீழே விழுந்தாரா?
ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தின்போது சபரிமலை போராளி ஒருவரை சந்தித்ததாக கூறி புகைப்படம் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, வைராகும் புகைப்படத்தில் ராகுல் காந்தியுடன் இருப்பவர் யார் என்பது குறித்து தேடினோம்.
இத்தேடலில் ராகுலடன் இருக்கும் அப்பெண்மணியின் பெயர் சஞ்சுக்தா பாசு என அறிய முடிந்தது. தனியார் செய்தி இணையத்தளங்களில் இவரது கட்டுரைகள் சில வெளிவந்திருந்ததை காண முடிந்தது. இவருக்கும் சபரிமலை போராட்டங்களுக்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என தேடியபோது, நேரடியாக இவர் களத்தில் போராடியதாக எந்த ஒரு செய்தியையும் காண முடியவில்லை. ஆனால் இவர் டிவிட்டரில் சபரிமலை போராட்டங்களுக்கு ஆதரவாக தொடர்ந்து டிவீட் செய்திருந்ததை காண முடிந்தது.

இதனையடுத்து உண்மையாகவே ராகுல் காந்தி சஞ்சுக்தாவை இந்திய ஒற்றுமை பயணத்தின்போது சந்தித்தாரா என்பதை உறுதி செய்ய, வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம். இதில் வைரலாகும் படத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் சஞ்சுக்தா பாசு அவரது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.
ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கியதிலிருந்தே அவர் குறித்தும், இப்பயணம் குறித்தும் பல பொய் செய்திகள் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. அவற்றில் சிலவற்றை நமது நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்து கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது பகிர்ந்து, இந்திய ஒற்றுமை பயணத்தில் சபரிமலை போராளியை ராகுல் காந்தி சந்தித்ததாக தவறான தகவல் ஒன்றை பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகின்றது
ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தின்போது சபரிமலை போராளி ஒருவரை சந்தித்ததாக கூறி வைரலாகும் புகைப்படம், கடந்த 2019 அல்லது அதற்கு முன் எடுக்கப்பட்ட பழைய படம் என்பதை நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக அறிய முடிகின்றது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Tweet, from Sanjukta Basu on Jan 23, 2019
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
June 14, 2024
Kushel HM
June 3, 2024
Vijayalakshmi Balasubramaniyan
May 21, 2024