Fact Check
Weekly Wrap: விஷால் முதல் சூர்யா வரை
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் விஷாலின் அரசியல் பிரவேசம், சூர்யாவின் மதமாற்றம், தமிழக அரசியல், உலக அரசியல் என பலவற்றைக் குறித்து வந்த செய்திகளை கண்டறிந்து அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அவற்றிலிருக்கும் பொய்களை ஆதாரத்துடன் வெளிப்படுத்தி இருந்தோம்.

விஷால் பாஜகவில் இணையவிருப்பதாக வதந்தி
நடிகர் விஷால் பாஜகவில் இணையவிருப்பதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது. ஆனால் இது முற்றிலும் தவறானத் தகவலாகும்.

காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவியா?
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்குத் துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்று மாவட்ட செயற்குழுவில் தீர்மானம் போடப்பட்டதாக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. ஆனால் அது முற்றிலும் பொய்யானத் தகவலாகும்.

சூர்யா இஸ்லாமிய மதத்துக்கு மாறியதாக வதந்தி
நடிகர் சூர்யா இஸ்லாமிய மதத்துக்கு மாறியதாக சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது. ஆனால் அது முற்றிலும் பொய்யானத் தகவலாகும்.

லடாக் பகுதியில் இந்திய ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக வதந்தி
லடாக் பகுதியில் M-17 ரக இந்திய ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதாக சமூக வலைத்தளங்களில் செய்திப் பரவி வருகிறது. ஆனால் அது முற்றிலும் பொய்யானத் தகவலாகும்.

பாஜக பிரமுகர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அத்துமீறினாரா?
ஜீ தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சியில் பாஜக பிரமுகர் நடுவர்களை மிரட்டியதாக செய்தி ஒன்று பரவி வருகிறது. ஆனால் அது முற்றிலும் பொய்யானத் தகவலாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)