Fact Check
Fact Check: தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி திருப்பதி சென்றாரா சீமான்?
Claim: தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி திருப்பதி சென்றார் சீமான்
Fact: வைரலாகும் படம் திருப்போரூர் கந்தசாமி கோயிலில் எடுக்கப்பட்டதாகும்
தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்பதி சென்று சிறப்பு தரிசனம் செய்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மாஃபா பாண்டியராஜன் அறக்கட்டளை கல்விக்கு நிதி உதவி தருவதாக பரவும் வதந்தி!
Factcheck / Verification
தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி சீமான் திருப்பதி சென்று சிறப்பு தரிசனம் செய்ததாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து, இத்தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய, வைரலாகும் படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.
இத்தேடலில் ‘தமிழுக்கு தாய்நாடு உள்ளது, சமஸ்கிருதத்துக்கு ஒரு மாவட்டமாவது உள்ளதா.? – சீமான்’ என்று தலைப்பிட்டு செப்டம்பர் 3, 2022 அன்று சமயம் தமிழில் வெளியிட்ட செய்தியில் வைரலாகும் படம் இடம்பெற்றிருப்பதை காண முடிநத்து. இச்செய்தில் திருப்போரூரில் இருக்கும் ஸ்ரீ கந்தசாமி கோயிலில் சீமான் தமிழ் வழி வழிபாட்டினை துவக்கி வைத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் ஏபிபி நாட்டிலும் சீமான் திருப்போரில் வழிபாடு நடத்தியதாக செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளர் பாக்கியராசனை தொடர்புக் கொண்டு வைரலாகும் படம் குறித்து விசாரித்தோம். அவரும் இந்நிகழ்வு திருப்போரில் நடந்தது என்பதை உறுதி செய்தார். திருப்போரூர் கந்தசாமி கோயிலில் தமிழ் ஓதுவார்களை அழைத்துச் சென்று வழிபாடு நடத்தியபோது இப்படம் எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில் சீமான் திருப்போரூர் கோயிலில் தமிழ் வழிபாடு நடத்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து, அவர் தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி திருப்பதி சென்றதாக சமூக வலைத்தளங்கலில் பொய்யான ஒரு தகவல் பரப்பப்படுகின்றது என்பது தெளிவாகின்றது.
Also Read: கூலி தொழிலாளியின் மகள் IAS தேர்வில் மூன்றாவது இடம் பிடித்ததாக பரவும் தவறான தகவல்!
Conclusion
தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி சீமான் திருப்பதி சென்று சிறப்பு தரிசனம் செய்ததாக பரவும் புகைப்படம் தவறானது என்பது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Report from Samayam Tamil, dated September 03, 2022
Report from ABP Nadu, dated September 03, 2022
Phone Conversation with Pakkiarajan, PRO, Naam Tamilar Katchi, dated March 24, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)