Fact Check
மாநிலத் தலைவர் பதவி தந்தால் பாஜகவில் சேர முடிவெடுத்துள்ளாரா செங்கோட்டையன்?
Claim: மாநிலத் தலைவர் பதவி தந்தால் பாஜகவில் சேர முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முடிவு.
Fact: செங்கோட்டையன் இத்தகவலை மறுத்துள்ளார்.
அதிமுக மூத்தத்தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், மாநிலத் தலைவர் பதவி கொடுத்தால் பாஜகவில் சேர செங்கோட்டையன் முடிவெடுத்துள்ளதாகவும் தினகரன் நாளிதழ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இச்செய்தியை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
