Thursday, June 18, 2026

Fact Check

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீட்டில் தங்கத்தாலான கழிப்பறையா?

banner_image

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீட்டில் தங்கத்தாலான கழிப்பறை இருப்பதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சமீபத்தில் இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கடந்த செவ்வாயன்று சோதனையிட்டது அனைவரும் அறிந்ததே. இதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் தங்கத்தாலான கழிப்பறை இருப்பதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அப்துல் மஜீத் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இத்தகவலை நேற்று (11/08/2021) பதிவிட்டுள்ளார். இந்த பதிவை கடந்த 24 மணி நேரங்களில் ஏறக்குறைய 5 இலட்சத்து 62 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். 160 பேர் விரும்பியுள்ளனர். 49 பேர் கமெண்ட் செய்துள்ளனர். 101 ஷேர் செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீட்டில் தங்கத்தாலான கழிப்பறை இருப்பதாக பரவும் தகவல்

Facebook link

இவரைத் தொடர்ந்து மேலும் பலரும் இத்தகவலை பகிர்ந்து வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீட்டில் தங்கத்தாலான கழிப்பறை இருப்பதாக பரவும் தகவல் - 1

Facebook link

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீட்டில் தங்கத்தாலான கழிப்பறை இருப்பதாக பரவும் தகவல் - 2

Facebook link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification:

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீட்டில் தங்கத்தில் கழிப்பறை இருப்பதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் பரவும்  புகைப்படங்களை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.

ரிவர்ஸ் சர்ச்

இந்த ஆய்வில் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது தெரிய வந்தது.

சமூக வலைத்தளங்களில் பரவும் பதிவில் காணப்படும் தங்க கழிப்பறை இங்கிலாந்தின் பிலேனியம் மாளிகையைச் சார்ந்ததாகும். இந்த கழிப்பறையானது கடந்த 2019 ஆம் ஆண்டு திருடப்பட்டதால் இதுகுறித்த செய்தி ஊடகங்களில் வெளிவந்திருந்ததை காண முடிந்தது.

உண்மைத்தன்மை

இதுக்குறித்த செய்தி மேலும் சில ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது. அவற்றை இங்கே, இங்கே, மற்றும் இங்கே படிக்கலாம்.

மேற்கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் தங்கத்தாலான கழிப்பறை இருப்பதாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது நிரூபணமாகின்றது.

Also Read: பாஜகவை கொச்சைப்படுத்தினால் தொழிலுக்கு பிரச்சனை கொடுப்போம் என்றாரா அண்ணாமலை?

Conclusion

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீட்டில் தங்கத்தாலான கழிப்பறை இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Omamoda: http://www.omamoda.com/a-toilet-made-entirely-of-18-carat-gold-has-been-stolen-from-a-palace-in-the-uk/#more-2482

Abcnews: https://abcnews.go.com/International/solid-gold-toilet-worth-million-stolen-winston-churchills/story?id=65621456

Tempo: https://www.tempo.com.ph/2019/09/15/solid-gold-toilet-stolen-from-churchill-birthplace/

Insider: https://www.insider.com/6-million-gold-toilet-stolen-from-winston-churchills-birthplace-2019-9


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

14,935

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage