Fact Check
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களா இவை?
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் என்று கூறி பிணக்குவியல்களின் மத்தியில் சிலர் நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

நமது நாட்டில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக உள்ளது. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, சரியான மருத்துவ வசதி இல்லாமை போன்ற காரணங்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந்த பேரிழப்புகளுக்கு மத்தியில் ஆளும் ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கே காரணமென்று ஒரு சாரார் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அப்புகைப்படத்தில் “ஒரு நாடு கல்வி சுகாதாரம் பற்றி யோசிக்காமல் 24 மணி நேரமும் சாதி மதத்தையே சிந்தித்தால் எப்படி அழியும் என்பதற்கு இந்தியா ஒரு எடுத்துக்காட்டு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Archive Link: https://archive.ph/JfZaZ

Archive Link: https://archive.ph/d6CDO

Archive Link: https://archive.ph/IXf6D
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய அப்புகைப்படம் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் என்று கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, அப்புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் சர்ச் (Google Reverse Search) முறையில் ஆய்வு செய்தோம்.
இவ்வாறு செய்ததில் இப்புகைப்படத்தின் பின்னணியில் இருந்த உண்மைத்தன்மை குறித்து நம்மால் அறிய முடிந்தது. உண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் படம் 2014 ஆம் ஆண்டு சுனாமி வந்தபோது எடுக்கப்பட்டதாகும். அதுவும் இப்படம் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, தாய்லாந்தில் எடுக்கப்பட்டதாகும்.
இந்நிகழ்வு குறித்து 2014 ஆம் ஆண்டு சில ஊடகங்களில் செய்தி வெளிவந்திருந்தது. அவற்றை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே படிக்கலாம்.


மேற்கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காணும்போது, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் என்று பரப்பப்படும் புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல என்பதும், 2014 ஆம் ஆண்டு தாய்லாந்தில் எடுக்கப்பட்டது என்பதும் நமக்கு தெளிவாகின்றது.
Conclusion
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படமானது, உண்மையில் சமீபத்தில் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல என்பதையும், அப்புகைப்படம் உண்மையில் 2014 ஆம் ஆண்டு தாய்லாந்தில் சுனாமியின்போது எடுக்கப்பட்டதென்பதையும் உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
North country Public Radio: https://www.northcountrypublicradio.org/news/npr/373128103/a-decade-after-tsunami-asia-s-shattered-coasts-are-on-the-mend
The Nation: https://nation.com.pk/26-Dec-2016/400-bodies-unidentified-in-thailand-after-tsunami
Mprnews: https://www.mprnews.org/story/2014/12/26/npr-tsunami-anniversary
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)