Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ஈரோடு கிழக்கு தொகுதியில் நீட் ரகசியத்தை வெளியிடுவேன் என்று உதயநிதி கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதில் நீட் தேர்வு ரத்தும் ஒன்றாகும். அதிலும் குறிப்பாக அமைச்சர் உதயநிதி திமுக ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக நீட் ரத்து செய்யப்படும் என்றும் அதற்கான ரகசியம் திமுக அறியும் என்றும் மேடைக்கு மேடை பேசினார்.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நீட் ரகசியத்தை வெளியிடுவேன் என்று உதயநிதி கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: நீட் தேர்வு கொண்டு வந்ததே திமுகதான் என்று பேசினாரா முதல்வர் ஸ்டாலின்? உண்மை என்ன?
ஈரோடு கிழக்கு தொகுதியில் நீட் ரகசியத்தை வெளியிடுவேன் என்று உதயநிதி கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக, வைரலாகும் புகைப்படச் செய்தியில் தந்தி தொலைக்காட்சியின் லோகோ இடம்பெற்றிருப்பதால் தந்தி தொலைக்காட்சி இவ்வாறு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளதா என அந்நிறுவனத்தின் சமூக ஊடக பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் இவ்வாறு ஒரு செய்தியை அந்நிறுவனம் வெளியிட்டதற்கான எந்த தரவும் நமக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் சமூக ஊடகப் பொறுப்பாளர் வினோத்தை தொடர்புக் கொண்டு வைரலாகும் புகைப்படச் செய்தி குறித்து விசாரிக்கையில், அது போலியானது, அதை நாங்கள் வெளியிடவில்லை என்று தெளிவுப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து திமுக ஐடி விங்கை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர்கள், இத்தகவல் முற்றிலும் பொய்யானது என்று பதிலளித்தனர்.
Also Read: அணு உலை வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட துருக்கி பூகம்பம் என்று பரவும் 2020 ஆம் ஆண்டு லெபனான் வீடியோ!
ஈரோடு கிழக்கு தொகுதியில் நீட் ரகசியத்தை வெளியிடுவேன் என்று உதயநிதி கூறியதாக வைரலாகும் புகைப்படச் செய்தி போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Phone Conversation with Vinoth, Thanthi TV, Dated on February 09, 2023
Phone Conversation with Yuvaraj, DMK IT Wing, Dated on February 09, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
March 28, 2024
Ramkumar Kaliamurthy
June 30, 2023
Ramkumar Kaliamurthy
November 6, 2023