Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: நாட்டை நாசமாக்கும் எல்லோரும் ‘சங்கி’தான் என்றார் வானதி சீனிவாசன்.
Fact: வைரலாகும் நியூஸ்கார்டு போலியாக எடிட் செய்து மாற்றப்பட்டதாகும்.
சமீபத்தில் லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் சங்கி இல்லை என்று அப்படத்தின் இயக்குனரும், ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
இக்கருத்தானது சமூக ஊடகங்களில் சலசப்பை ஏற்படுத்திய நிலையில், ”நாட்டை நாசமாக்கும் எல்லோரும் ‘சங்கி’தான்” என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அயோத்தி ராமரைப் பார்த்து கண்ணீர் விட்ட புகைப்படக் கலைஞர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
நாட்டை நாசமாக்கும் எல்லோரும் ‘சங்கி’தான் என்று வானதி சீனிவாசன் கூறியதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவர் இவ்வாறு கூறினாரா என தேடினோம்.
இத்தேடலில் இந்த நாட்டை நேசிக்கின்ற, இந்த நாட்டு நலனில் எந்த சமரசம் செய்து கொள்ளாத, யாராக இருந்தாலும் அவர்களை சங்கி என்று பெருமையாக சொல்லிக் கொள்வோம் என்று வானதி சீனிவாசன் பேசிய வீடியோ ஒன்று Voice of Vanathi எனும் யூடியூப் பக்கத்தில் நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது.
இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் மேற்கண்ட தகவல் தவறானது என்பது தெளிவாகின்றது. இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது ஜூனியர் விகடனின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் ‘நாட்டை நேசிக்கின்ற எல்லோரும் ’சங்கி’தான் – வானதி சீனிவாசன்!’ என்று தலைப்பிட்டு நியூஸ்கார்ட் ஒன்றை ஜூனியர் விகடன் வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே வைரலாகும் நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


இதனைத் தொடர்ந்து ஜூனியர் விகடனின் ஆசிரியர் பிரிட்டோவை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்து மாற்றப்பட்டது என்பதை அவரும் உறுதி செய்தார்.
Also Read: நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் கவலையில்லை என்றாரா துரைமுருகன்?
நாட்டை நாசமாக்கும் எல்லோரும் ‘சங்கி’தான் என்று வானதி சீனிவாசன் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report from Junior Vikatan, Dated Jan 29, 2024
Phone Conversation with I.Britto, Editor, Vikatan
Youtube Video from Voice of Vanathi, Dated Jan 29, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 20, 2024
Vijayalakshmi Balasubramaniyan
June 14, 2024
Ramkumar Kaliamurthy
June 13, 2024