Fact Check
வேங்கைவயலுக்குள் அனுமதிக்கப்பட்ட பாஜக வேட்பாளர் என்று பரவும் நாதக வேட்பாளர் புகைப்படம்!
Claim: எந்தக் கட்சியையும் உள்ளே பரப்புரைக்கு அனுமதிக்காத வேங்கைவயல் மக்கள் பாஜக கட்சியை அனுமதித்திருக்கிறார்கள்
Fact: வைரலாகும் புகைப்படத்தில் இடம்பெற்றிருப்பவர்கள் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மற்றும் உறுப்பினர்கள்.
வேங்கைவயலுக்குள் அனுமதிக்கப்பட்ட பாஜக வேட்பாளர் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“எந்தக் கட்சியையும் உள்ளே பரப்புரைக்கு அனுமதிக்காத வேங்கைவயல் மக்கள் பாஜக கட்சியை அனுமதித்திருக்கிறார்கள்” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று டைனிக் பாஸ்கர் கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?
Fact Check/Verification
வேங்கைவயலுக்குள் அனுமதிக்கப்பட்ட பாஜக வேட்பாளர் என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ஆராய்ந்தபோது அதில் இடம்பெற்றிருப்பவர்களில் ஒருவர் சாட்டை துரைமுருகன் என்பதை அறிய முடிந்தது. எனவே, சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் சமூக வலைத்தளப்பக்கங்களில் தேடினோம். அதன் முடிவில், “எந்தக் கட்சியையும் உள்ளே பரப்புரைக்கு அனுமதிக்காத வேங்கைவயல் மக்கள் நாம் தமிழர் கட்சியை அனுமதித்திருக்கிறார்கள்.” என்று இடும்பாவனம் கார்த்திக் பகிர்ந்திருந்த புகைப்படம் நமக்குக் கிடைத்தது.
மேலும், சாட்டை துரைமுருகன் இந்த தேர்தல் பரப்புரை தொடர்புடைய மற்ற சில புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷை ஆதரித்து இந்த வேங்கைவயல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் அது என்பது நமக்கு உறுதியானது.
நாம் தமிழர் கட்சி துண்டு இடம்பெற்றிருந்த இடத்தில் பாஜக கட்சித்துண்டினை எடிட் செய்து வைரல் புகைப்படம் பரவுகிறது என்பதும் நமக்கு உறுதியாகியது.


Conclusion
வேங்கைவயலுக்குள் அனுமதிக்கப்பட்ட பாஜக வேட்பாளர் என்று பரவும் புகைப்படத்தில் இருப்பவர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Image
Our Sources
X Post from Idumbavanam Karthick, Dated April 16, 2024
X Post From, Sattai Duraimurugan, Dated April 16, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)