Fact Check
திமுக ஆட்சி முடியும் வரை சிறிய படங்கள் தயாரிக்க வேண்டாம் என்றாரா விஷால்?
Claim: சினிமாத்துறை உதயநிதியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் திமுக ஆட்சி முடியும் வரை சிறிய படங்கள் தயாரிக்க வேண்டாம் என்றார் விஷால்
Fact: இன்னும் 120 படங்கள் ரிலீசாவதற்கு காத்திருப்பதால் 2 வருடங்களுக்கு சிறிய பட்ஜெட் படங்கள் எடுக்க வேண்டாம் என்றே விஷால் கூறினார்.
“இந்த ஆட்சி முடியும்வரை சிறிய படங்கள் (4 கோடி வரை) தயாரிக்க வர வேண்டாம். இங்கு நிலைமை சரியில்லை. ஒட்டுமொத்த சினிமாத்துறையும் உதயநிதியின் கட்டுபாட்டில் இருப்பதால் சிறிய தயாரிப்பாளர்களால் சமாளிக்க முடியாது” என்று நடிகர் விஷால் கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தமிழக பாஜக என்னும் தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டார் அண்ணாமலை என்று கூறினாரா ஹெச்.ராஜா?
Fact Check/Verification
சினிமாத்துறை உதயநிதியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் திமுக ஆட்சி முடியும் வரை சிறிய படங்கள் தயாரிக்க வேண்டாம் என்று விஷால் கூறியதாக வீடியோ ஒன்று வைரலானதை தோடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
வைரலாகும் வீடியோவில் ‘Friday Facts’ எனும் யூடியூப் பக்கத்தின் வாட்டர்மார்க் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது. இதை அடிப்படையாக வைத்து தேடியதில் அந்த யூடியூப் பக்கத்தில் செப்டம்பர் 21, 2023 அன்று மார்க் ஆன்டனி சக்சஸ் மீட்டின் பத்திரிக்கையாளர் சந்திப்பு வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது.
இவ்வீடியோவின் 14:16 மணியில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் அப்பகுதி இடம்பெற்றிருந்தது. அதில் ஏற்கனவே 120 படங்கள் ரீலிஸாவதற்கு காத்திருப்பதால் 2 வருடங்களுக்கு சிறிய படங்கள் (ஒரு கோடி முதல் 4 கோடிவரை) எடுக்க வேண்டாம். ஒருவேளை எடுத்தால் அந்த பணம் திரும்ப வராது என்று விஷால் பேசி இருப்பதை காண முடிந்தது.
ஆனால் எந்த ஒரு இடத்திலும் உதயநிதி குறித்தோ, ரெட் ஜெயண்ட் நிறுவனம் குறித்தோ விஷால் இதில் பேசி இருக்கவில்லை.
இதனடிப்படையில் பார்க்கையில் சினிமாத்துறை உதயநிதியின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்று விஷால் பேசியதாக பரப்பப்படும் தகவல் தவறானது என்பது தெளிவாகின்றது.
Also Read: திமுக ஆட்சியில் கொடிவேரி அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் தாக்கப்பட்டதாக பரவும் பழைய வீடியோ!
Conclusion
சினிமாத்துறை உதயநிதியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் திமுக ஆட்சி முடியும் வரை சிறிய படங்கள் தயாரிக்க வேண்டாம் என்று விஷால் கூறியதாக பரவும் வீடியோத் தகவல் முற்றிலும் தவறானதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
YouTube Video from Friday Facts, September 21, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)