Fact Check
கள்ள ஓட்டை மநீம நிர்வாகி தட்டிக் கேட்கும் வீடியோ 2024 பொதுத்தேர்தலில் எடுக்கப்பட்டதா?
Claim: 2024 பொதுத்தேர்தலில் கள்ள ஓட்டை தட்டிக் கேட்ட மநீம நிர்வாகி
Fact: வைரலாகும் வீடியோ 2 ஆண்டுளுக்கு முந்திய பழைய வீடியோவாகும். இந்நிகழ்வு 2022 ஆம் ஆண்டு நடந்த மாநகராட்சித் தேர்தலில் நடந்ததாகும்.
இந்தியாவில் 2024 பொதுத்தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடத்த முடிவெடுக்கப்பட்டு கடந்த வெள்ளியன்று (ஏப்ரல் 19) முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் தமிழகத்தின் 39 தொகுதிகள் உட்பட மொத்தம் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நிறைவுற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நடந்த தேர்தலில் கள்ள ஓட்டு போடப்பட்டதாகவும், அதை மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகி தட்டிக்கேட்டதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

