Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து கட்டுரைகள் உங்கள் பார்வைக்காக:

டெல்லி சலோ போராட்டத்தில் எடுக்கப்பட்ட படமா இது?
டெல்லியில் நடக்கும் டெல்லி சலோ போராட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் அது பழைய படமாகும்.

கவின் பிக்பாஸ் சீசன் நான்கில் குரல் கொடுத்ததாக வதந்தி
பிக்பாஸ் சீசன் நான்கில் கவின் குரல் பயன்படுத்தப்பட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் அது தவறானத் தகவலாகும்.

எஸ்.வி.சேகர் திமுகவில் இணைந்ததாக வதந்தி!
நடிகர் எஸ்.வி.சேகர் திமுகவில் இணைந்துவிட்டதாக பரவும்
புகைப்படச் செய்தி உண்மையில்லை.

புரெவி புயலின் அர்த்தம் குதிரை வேகப் புயல் என்பதா?
புரெவி என்கிற பெயரில் புதிதாக உருவாகியுள்ள புயலின் பெயர்க்காரணம் குதிரை வேகம் என்று பரவி வருகின்ற தகவல் தவறானதாகும்.

விஜய்யின் `மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா?
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர்
திரைப்படம், ஓடிடி இணையதள சேவை வழியாக வெளியாகும் எனப் பரவிய தகவல்
தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)